பக்கம் எண் :

இயனிலைப் படலம்15

மாறோக்கம் என்னும் கொற்கை நாட்டார், பண்டை நாளில் சிறுமியைப் பெண்மகன் என்றனர்; இன்று வடார்க்காட்டார் பெட்டைப் பசன் என்பர். பையன்-பயன்-பசன்.

பலர்பாலீறுகள்

ஆர்தல் = பொருந்துதல், கூடுதல், நிறைதல்.

ஆர் = பொருத்து, நிறைவு.

பலர் கூடுதல் என்னும் கருத்தில் ஆர் என்னுஞ் சொல்லே பலர்பாலீறாயிற்று.

எ-டு: தட்டார், பொல்லார்.

ஆரீறு அர் எனக் குறுகும்.

எ-டு: அவர், பலர், கொல்லர்.

ஆரீறு ஓர் என்றும் திரியும்.

எ-டு: பெரியார் - பெரியோர், முன்னார் - முன்னோர்.

"ஆர்" ஈறு பெற்ற மகார் என்னும் பெயரும் மார் என மருவிப் பலர்பாலீறாம். மக-மகார்-மார்.

எ-டு: அண்ணன்மார், தேவிமார்.

செய்யும் என்னும் எதிர்கால வினைமுற்றோடு ஆரீறு சேரும் போது, ஒரு "மார்" தோன்றும். அது வினையீறு. செய்யும் + ஆர் = செய்யுமார் - செய்மார் - செய்வார்.

உயர்திணைக்கு உரியதன்றென்று விலக்கப்பட்ட கள் ஈறு, சிறுபான்மை அத் திணைக்கும் வரும்.

எ-டு: மக்கள், கோக்கள், குருக்கள், திருக்கள், நாங்கள், நீங்கள், அவர்கள், தாங்கள், ஆள்கள், ஆண்கள், பெண்கள், பையன்கள். மக்கள் என்னும் பெயர் தொல் காப்பியத்திலும் உள்ளது.

"உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே." (484)

"மக்கள் தாமே ஆறறி வுயிரே." (1532)

மக + கள் = மக்கள். இது மரூஉப் புணர்ச்சி.

ஒ.நோ: அக + களிப்பு = அக்களிப்பு.

மக்களை இழிந்தோர், ஒத்தோர், உயர்ந்தோர் என முத்திறத்தா ராக வகுத்து, அவரை முறையே நீ, நீர், நீங்கள்; அவன், (அவள்), அவர்,