|
அ-அம்-அன்-அல்-அது; இ-இம்-இன்-இல்-இது;
உ-உம்-உன்-உல்-உது.
எ-டு: (கிழது)-கிழடு, கரிது-கரிசு, ஏருது-எருது.
சிறிது பெரிது எளிது வலிது என்னும்
சொற்களின் ஈறு, இது என்னும் சுட்டுப்பெயரே.
வலத்தை, கருத்தை, சிறுத்தை, வெந்தை என்னும்
சொற்கள், முறையே, வலத்தது, சிறுத்தது, வெந்தது என்று
பொருள்படுவதை யும், ஐகாரவீற்றுச் சொற்கள் பல முதலில்
அகர வீற்றவாயிருந் ததையும், நோக்கும்போது,
அகரமும் அது என்னும் சுட்டடி யீறுபோற் பயன்பட்டிருக்கலாம்
என்று கருத இடமேற்படுகின்றது.
பலவின்பாலீறுகள்
முதற்காலத்திலிருந்த பன்மையீறு, கூடுதல்
என்னும் பொருள் கொண்ட உம் என்னும் சொல்லென்பது,
முன்னர்க் கூறப்பட்டது. அறமும் பொருளும் என்னுந் தொடரில்,
உம் என்பது கூடுதற் பொருளைக் குறித்தல் காண்க. அச்
சொல் இன்று அப் பொருளில் வழக்கற்றுப் போயினும்,
அதன் அடிப்பிறந்த கும் என்னுஞ் சொல் அப்
பொருளில் வழங்குதலை நோக்குக.
கும்முதல் கூடுதல், கும்-கும்மிங்,
கும்-கும்பு - கும்பல்
உம்மீற்றின்பின் தோன்றிய பன்மையீறு
கள் என்பதே. அதுவும் கூடுதல் என்னும் பொருளதே.
கள்ளுதல் = கூடுதல், கலத்தல், பொருந்துதல்,
ஒத்தல். கள் - களம் = கூட்டம், கூடுமிடம். அவைக்களம்,
ஏர்க்களம், போர்க்களம், திணைக்களம் முதலிய
சொற்களை நோக்குக. களம் - களன் - களம் -களர் -
களரி. களம் - (களகு) - கழகு - கழகம்.
கள்ள என்பது ஓர் உவமவுருபு.
"கள்ள மதிப்ப வெல்ல வீழ" (தொல். 1285)
கள்ள=பொருந்த, ஒக்க.
பலபொருள்கள் கூடுதல் என்னுங் கருத்தில்,
கள் என்னுஞ் சொல் பன்மையீறாயிற்று. மரங்கள் =
மரக்கூட்டம்.
ஐம்பாலீறு தோன்றியபோது, அகரச்சுட்டும்
அதனடிப் பிறந்த அவை என்னும் சொல்லின் வையீறும்
பலவின்பாலீறாக வரை யறுக்கப் பெற்றன.
அ-அம்-அவ்-(அவ)-அவை.
இ-இம்-இவ்-(இவ)-இவை.
உ-உம்-உவ்-(உவ)-உவை.
|