|
5ஆம் வேற்றுமையுருபு
(நீக்கம்)
இன். இது இடப்பொருளுருபான இல் என்பதன்
திரிபே.
இலிருந்து (இல்+இருந்து) அல்லது இனின்று
(இல்+நின்று) என்னும் உலகவழக்குக்
கூட்டுச்சொல்லுருபே, செய்யுள்வழக்கில் இல் என
தனிச் சொல்லுருபாய்க் குறுகித் திரிந்தது.
இனின்று என்னும் புணர்ச்சியும் இதற்குப் பெரிதும்
உதவிற்று.
மரத்திலிருந்து, மரத்தினின்று என்னும்
உலக வழக்கே, இயற்கையாகவும் பொருள்நிரம்பியும்
மூலத்தைத் தெளிவாய்க் காட்டுவதாகவும் இருத்தல்
காண்க. இறங்கும் அல்லது விழும்நிலை, இருத்தல்
நிற்றல் ஆகிய இரண்டில் ஒன்றாகவே யிருக்கும்.
6ஆம் வேற்றுமையுருபு
(உடைமை)
அது-ஆது (ஒருமை); அ (பன்மை).
இவை உடைமைப் பொருணர்த்தும் குறிப்பு
வினைமுற்று களின் முறைமாற்றாம். ஆதலால், இவை
யிரண்டும் எண் காட்டும்.
|
குறிப்பு வினைமுற்று
|
ஆறாம் வேற்றுமைப் பெயர்
|
|
எடு:
|
கை எனது (ஒருமை)
கைகள் என (பன்மை) |
எனது
கை
என கைகள்
|
உடைய என்பது ஈரெண்ணிற்கும் பொதுவான
வுருபாம்.
அன், இன் என்பனவும் உடைமை வேற்றுமை
யுருபாக வரும்.
எ-டு: இதன் பொருள், நீரின் தண்மை.
7ஆம் வேற்றுமையுருபு
(இடம்)
இடைச்சொல்லாக நின்று
இடப்பொருளுணர்த்தும் எல்லாச் சொற்களும் 7ஆம்
வேற்றுமையுருபாம். வேற்றுமை யென்றது
பொருள்பற்றியே யன்றிச் சொற்பற்றியன்று.
ஆயின், ஆரியம் போன்ற திரிமொழிகளில்
வேற்றுமை சொல்லையே தழுவிநிற்கும்.
இடப்பொருளுருபுகளுள், சிறப்பாகக்
கொள்ளப்பெறுவது உலகவழக்கில் இல்; செய்யுள்
வழக்கில் கண்.
இடம், பக்கம், ஓரம், நடு, உள், வெளி,
கீழ். மேல், முன், பின் ஆகிய எல்லாவகை
யிடப்பொருளிலும் 7ஆம் வேற்றுமை யுருபுகள் வரும்.
இடம் என்னும் சொல்லும் இல்லுருபேற்ப துண்டு.
எ-டு: என்னிடம், என்னிடத்தில்.
|