|
வழங்குகின்றன. ட-ர. போலித்திரிபு. ஒ.நோ:
குடம்பை-குரம்பை, படவர்-பரவர்.
எல்ல என்னும்
விளியிடைச்சொல்லிலிருந்து, சில பெயர்ச்
சொற்களும் பிறந்துள்ளன.
எல்ல-எலுவன் = தோழன். எலுவன் - எலுவல்.
எலுவை = தோழி. ஏட-ஏடன்=அடியான்.
எல்லா என்னும் தமிழ்ச்சொல்லும், hallo
என்னும் ஆங்கிலச் சொல்லும், ஒலியும் பொருளும்
ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. இவ்
வொப்புகைக்குக் கரணியும் அடுத்த படலத்தில்
விளக்கப்பெறும்.
முதற்காலத்தில், வேளும்
வேளினியுமாகிய தலைவனும் தலைவியும்
ஒருவரையொருவர் மதிப்பாக விளித்த எல்லா என்னும்
சொல் ஏல, எழ, ஏட, அட, அடா, அடே, அடீ எனப்
படிப்படியாய் வடிவுதிரிந்தும் மதிப்புக்குன்றியும்
பால்பிரிந்தும், நாளடைவில் இழி மக்களை
விளிக்கும் சொல்லாயிற்று.
சில வேற்றுமை மரபுகள்
உடனிகழ்ச்சியை ஒரு தனி
வேற்றுமையாக்கின், வேற்றுமை மொத்தம்
ஒன்பதாம்.
ஒவ்வொரு வேற்றுமையும், ஒவ்வொரு
அல்லது ஒருசில இடைச்சொல்லால் உணர்த்தப்பெறும்
பல்வேறு கருத்துகளின் தொகுதியேயன்றி ஒரு
தனிப்பட்ட கருத்தன்று. இரண்டாம் வேற்றுமைப்
பொருளாக இருபத்தெண் கருத்துகளை எடுத்துக் கூறினார்
தொல்காப்பியர். ஆயினும், அவற்றுள் எல்லாம்
அடங்கவில்லை. செயப்படுபொருள் குன்றாவினை என
இலக் கணியர் வகுத்த வினைச் சொல்வகைக்கு, ஏற்ற
கருத்துகளெல்லாம் இரண்டாம் வேற்றுமைப் பொருளே
அல்லது செய்பொருள் வகையே. இங்ஙனமே ஏனை
வேற்றுமைகளும் கருத்துத்தொகுதி களே என அறிக.
அசையுருபு சொல்லுருபு என வேற்றுமையுருபு
இருவகைப் படும். சில கருத்துகளைச் சொல்லுருபாற்
குறித்திருப்பதே உலக வழக்கிற் பெருவழக்காம்.
சொல்லுருபு ஏதேனுமோ ரசையுருபொடு கூடி வருவதே
பெரும்பான்மை.
|
வேற்றுமை
|
பொருள்
|
சொல்லுருபு
|
எடுத்துக்காட்டு
|
|
3ஆவது
|
துணைக்கருவி
|
கொண்டு
ஐ + கொண்டு
இட்டு
|
எழுத்தாணி கொண்டு
கல்லைக்கொண்டு
உளியிட்டு |
|
5ஆவது
|
உறழ்பொருள்
|
ஐ+விட ஐ+காட்டிலும்
|
அதைவிட
அதைக்காட்டிலும்
|
|