6ஆவது உடைமை உடைய கண்ணனுடைய
உடைமைக் கருத்தை
வேற்றுமைத்தொகையாற் குறிப்பதே உலக வழக்கிற்
பெரும்பான்மையாம். மூவிடப் பகரப்பெயர்கள் இவ்
வழக்கில் நெடுமுதல் குறுகும்.
எ-டு: மறைமலையடிகள் மாளிகை, என் மகள்.
அசையுருபாற் பொருள் நிரம்பாதபோது ஒரு
சொல்லும் அதனுடன் சேர்க்கப்பெறும்.
எ-டு: அவன் எனக்காக இங்கு வந்தான்.
ஒரே பொருள், சொல்வான்
கருத்துப்பற்றியும் முடிபுச் சொல் பற்றியும்,
வெவ்வேறு வேற்றுமையால் குறிக்கப்பெறும்.
எ-டு:
அஞ்சியின் மகன் பொகுட்டெழினி (உடைமை)
அஞ்சிக்கு மகன் பொகுட்டெழினி
(உறவுமுறை)
திருவள்ளுவரை நிகர்ப்பார் யார்?
(வினைமுடிபு)
திருவள்ளுவரை நிகர் யார்? (பெயர்முடிபு)
ஒரு வேற்றுமை வேறொரு வேற்றுமையையுந்
துணைக் கொள்ளும்.
எ-டு: அறைக்குள் என்பதில் 7ஆவது
4ஆவதைத் துணைக் கொண்டமை காண்க.
(5) சாரியைகள்
தாமாகச் சேராத சொல்லுறுப்புகளையும்
சொற்களையும் சார்ந்து இயைக்கும் அசைகளும்
சொற்களும், சாரியை எனப்படும். இயைத்தல்
இசைத்தல். தாமாக ஒலிக்காத எழுத்துகளை
ஒலித்தற்கும், ஒலிக்கும் எழுத்துகளை எளிதாய்
ஒலித்தற்கும், அவற்றைச் சார்ந்துவரும் ஒலிகளும்
சாரியை எனப்படும். ஆகவே. எழுத்துச் சாரியை,
சொற்சாரியை எனச் சாரியை இருவகையாம்.
எழுத்துச்சாரியை
உயிரெழுத்துகளுள் குறிலுக்குக் கரமும்
நெடிலுக்குக் காரமும் சாரியையாம். நெடில்களுள் ஐ,
ஒள என்னும் இரண்டிற்கும் கான் என்பது
சிறப்புச்சாரியை.
ஆய்தத்திற்குச் சாரியை ஏனம்
என்பதாம். அது சேரும்போது ஆய்தத்திற்கு முன்
அகரமும் பின் ககரமெய்யும் சேர்ந்து அஃகேனம்
என்றாகும்.
|