|
(4) உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது
(எதிர்காலம்)
உது. எ-டு: செய்யுது, கூறுது,
வருது.
உது ஈறு துவ்வளவாகக் குறுகி, அடிநீண்ட
லகர ளகரவீற்று வினைமுதனிலைகளோடு கூடும்போது, றுகர
டுகரமாகத் திரியும்.
எ-டு: செல்-சேல்+து
= சேறு.
கொள்-கோள்+து = கோடு.
ஒ.நோ: செல்-சேல்+தல் = சேறல் (தொழிற்பெயர்)
கொள்-கோள்+தல் =
கோடல் (தொழிற்பெயர்).
தன்மைப்பன்மை யீறுகள்
(1) தன்மைப் பன்மைப்
பெயர்களினின்று தோன்றியவை.
ஏ-எம், (நாம்) -
ஆம்-அம், ஆம்-ஓம்.
(2) செய்து என்னும்
வாய்பாட்டு இறந்தகால வினையினின்று
தோன்றியவை.
து+உம் (பன்மையீறு)=தும்.
தும் - டும். தும் - றும்
(3) எதிர்கால
வினைமுற்றினின்று தோன்றியது.
கு+உம் (பன்மையீறு)=கும்.
(4) உகர்ந்தாய்
பிறந்தது (எதிர்காலம்),
எ-டு: செய்யுதும், கூறுதும்,
வருதும்.
து-று. சேறு+உம்
(பன்மையீறு)=சேறும்.
து-டு.
கோடு+உம்(பன்மையீறு)=கோடும்.
(5) செய்யும் என்னும்
முற்றினின்று தோன்றியது.
செய்யும்-உம்.
முன்னிலைவினை யீறுகள்
முக்கால நிகழ்ச்சிவினை யீறுகள்
முன்னிலைப் பெயர்களினின்று
தோன்றியவை.
ஒருமை (நீ)-ஈ-இ.
ஈ - ஏ - ஐ - ஆய்.
எ-டு : வந்தீ - வந்தே -
வந்தை - வந்தாய்.
ஒ.நோ: சீ-சே-சை(இகழ்ச்சிக்குறிப்பு).
உரை - உராய், குழை-குழாய்.
|