|
பன்மை
(1) முன்னிலைப் பன்மைப் பெயரினின்று
தோன்றியவை
(ஊம்) - உம்.
எ-டு : செய்யும்
உம்+கள்.
எ-டு : செய்யுங்கள்
உம்+(நீம்+ஈம்-இம்)-இன்.
எ-டு : செய்யுமின்-
செய்ம்மின்
மின்+கள் எ-டு :
செய்ம்மின்கள்
மின் என்னும் ஈற்றின் மகரம் நெறி
(விதி) முதல் என அறிக.
கள் என்பது படர்க்கை யீறேனும்
இரட்டைப் பன்மை குறித்து மூவிடத்தும் வரும்.
எ-டு: நாங்கள், நீங்கள், அவர்கள்.
செய்யுமின் என்பதிலுள்ள உம்மின்
(உம்+இன்) என்னும் இரட்டைப்பன்மையை,
செய்யுங்கள் என்பதிலுள்ள உங்கள் (உம்+கள்)
என்பதுபோலக் கொள்க. செய்ம்மின் என்பதன்
இரட்டைப்பன்மைப் பொருள் மறைந்தபின், கள்ளீறு
பிறவற்றொடு சேர்ந்ததுபோல் அதனோடும்
சேர்ந்தது. இம் முக்கைப் பன்மையைப் பெண்
பெண்டாட்டி என்பதுபோன்ற மீமிசைச் சொல்லாகக்
கொள்க.
(2) எதிர்கால வினைமுற்றினின்று
தோன்றியது.
செய்+உது+ஈர் =
செய்யுதீர்-செய்யுதிர்செய்திர்.
(3) செய்யாய் என்பதற்கொத்து
சொல்லும் வடிவம்.
வியங்கோள்வினை யீறுகள்
வியங்கோள்வினை யீறுகள் மூவகையில்
தோன்றும்.
(1) தொழிற்பெயரீறுகள்
அல். எ-டு:செயல்.
"ஒல்லும் வகையால் அறவினை யோவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்." (குறள்.33)
தல். எ-டு: செய்தல்.
"இயற்கைப் பொருளை இற்றெனக்
கிளத்தல்." (தொல்.502)
(2) அகரவீற்று வினையெச்ச ஈறு
செய்ய-அ. எ-டு: வரப்புயர!
நடக்க-க. எ-டு; வாழ்க!
|