|
அது, இ என்பன முதற்காலத்தில் வினைமுத
லீறாய் இருந் திருக்கலாம்.
| ஒ-நோ:
|
இ.கா.வி.எ.
|
வினைமுதற்பெயர்
|
|
ஓடி
எச்சம்
நன்று = நன்றாய்
|
ஓடி = ஒடினவன்
வினைமுதற் பெயர்
நன்று = நல்லது. |
பு, ஆ, ஊ என்பவற்றின் மூலமும் பொருளும்
விளங்கவில்லை. இவை செய்து, ஓடி என்பவற்றிற்குப்
பிற்பட்டவையாகும்.
ஆ என்பது வடதிரவிட வழிப்பட்ட
இந்தியில், இறந்தகால வினைமுற்றீறாகவும்
வினையெச்சவீறாகவும் வழங்குகின்றது. செய்து என்பது
முதற்காலத்தில் வினைமுற்றாகவும் இருந்ததினால்,
ஆவீறும் தமிழில் அங்ஙனம் இருந்திருக்கலாம்.
நிகழ்கால வினையெச்ச வீறு
செய்ய என்னும் வாய்பாட்டுச்
சொல்லே, நிகழ்கால வினை யெச்சமாகப் பண்டைத்
தமிழிலக்கண நூல்க ளெல்லாவற்றிலும் தவறாகக்
குறிக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலத்தில்
Infinitive
Mood
என்று சொல்லப்பெறும்
எதிர்காலவினையெச்சமேயன்றி வேறன்று.
உரையும் இலக்கணமும் உட்பட, பண்டைத்
தமிழிலக்கிய மெல்லாம், பொதுவாயினும்
சிறப்பாயினும், செய்யுள்வடிவிலேயே இருந்தன.
அதனால், பண்டைத் தமிழிலக்கணங்களும் செய்யுள்
நடைக்கே எழுதப்பெற்றன. பல சொற்களும்
சொல்வடிவுகளும் செய்யுள் நடையில்
இடம்பெறுவதில்லை. முன்னூல் நடையையே பின்னூல்களும்
மரபாகப் போற்றிவந்தன. ஆரியர் தென்னாடு வந்து
தமிழ் கற்றுத் தமிழிலக்கண
நூலாசிரியருமானதினால், தம் அறியாமையால்
கால்டுவெலாரைப்போன்றே பல தவறுகள்
செய்துள்ளனர். கின்று என்னும் நிகழ்கால
வினைவடிவம், எங்ஙனமோ இடைக் கழகத்திற்குப்பின்
செய்யுளில் இடம்பெறாது போயிற்று. அதனால்,
செய்யும் என்னும் எதிர்கால வினையையே
நிகழ்காலத்திற்கும் புலவர் பயன்படுத்தி
வந்திருக்கின்றனர். ஆயினும், பண்டை நிகழ்கால
வினையின் எஞ்சுகுறிகள், இலக்கியத்திலும்
இலக்கணத்திலும் தொடர்ந்து இருந்தே
வந்திருக்கின்றன.
"கின்று" இடைநிலைகொண்ட
வினையாலணையும் பெயரின் மரூஉக்கள்,
தொல்காப்பியத்தில் ஆங்காங்குத் தனிப்பட
வருவது டன், ஒரே நூற்பாவிற் பல ஒருங்குகூடியும்
வருகின்றன.
|