|
எ-டு:
"புணரியல் நிலையிடைப் பொருணிலைக் குதநவும்
வினைசெயல் மருங்கிற் காலமொடு
வருநவும்
வேற்றுமைப் பொருள்வயின் உருபா
குநவும்
அசைநிலைக் கிளவி யாகி வருநவும்
இசைநிறைக் கிளவி யாகி வருநவும்
தத்தம் குறிப்பிற் பொருள்செய்
குநவும்
ஒப்பில் வழியாற் பொருள்செய்
குநவும்" (தொல்.
735)
உதந என்பது உதவுந என்பதன் தொகுத்தல்.
உதவுகின்ற-உதவுகுன்ன-உதவுகுந-உதவுந.
செய்கின்ற-செய்குன்ன-செய்குந.
உதவுகின்ற=உதவுகின்றவை.
பொருகின்றான்-பொருகுன்னான்-பொருன்னான்-பொருநன்.
செய்யின் அல்லது செய்தால் என்னும்
வாய்பாட்டெச்சம் நிலைப்பாட்டு
வினையெச்சமாதலின் (Subjunctive
or Conditional Mood), சரியான எதிர்கால
வினையெச்சமாகாது. இலக்கண முறைப்பட்ட முக்கால
வினையெச்ச வாய்பாடு கீழ்க்காணும் முறையிலேயே
இருத்தல் கூடும்.
| இ.கா.
|
நி.கா.
|
எ.கா.
|
செய்து
(Past Participle)
|
செய்துகொண்டு
(Present Participle)
|
செய்ய
(Future Participle or Infinitive
Mood) |
செய்துகொண்டு என்று தமிழிலும்.
சேசிக்கொனி என்று தெலுங்கிலும், நிகழ்கால
வினையெச்சம் உலகவழக்கில் தொன்று தொட்டு
வழங்கிவருகின்றது. செய்துகொண்டு என்னும் சொல்லே
யன்றி, செய்ய என்னும் சொல் நிகழ்காலத்தை
உணர்த்தாது. செய்துகொண்டு இருக்கிறான், செய்ய
இருக்கிறான் என்னும் இரு தொடரின் பொருளையும்
ஓப்புநோக்கி உண்மை தெளிக.
செய்ய என்னும் சொல் இயல்பாக
எதிர்காலத்திற்கே உரியதேனும், முன்னிகழ்ச்சி,
ஒருங்கு நிகழ்ச்சி, பின்னிகழ்ச்சி என்னும்
முக்கால நிலையையும் உணர்த்துமாறு ஆளப்பெறும்.
எ-டு:
மழைபெய்யக் குளம் நிறைந்தது - முன்னிகழ்ச்சி
மணியடிக்கக் கழுதை கத்திற்று - ஒருங்கு நிகழ்ச்சி
பயிர்விளைய மழைபெய்தது -
பின்னிகழ்ச்சி (எ.கா.)
இவற்றுள், முன்னிகழ்ச்சி பின்வருந்
தொடராலும், ஒருங்கு நிகழ்ச்சி ஆட்சியினாலுமே
அறியப்படும். செய்து என்னும் சொற் போல், செய்ய
என்னும் சொல் தனிநின்று இறந்தகாலத்தை யுணர்த்
|