|
அது, ஆது என்பன சுட்டடிச்சொற்கள். ஏ
என்பது இசை நீட்டம். அ ன்று, அன்றி என்பவற்றை
நன்று, நன்றி என்பவை போலக் கொள்க. அல்லா
என்பது ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். மை
பண்புப் பெயரீறு. அல்லால் என்பது அல்லாமல்
என்பதன் தொகுத்தலா யிருக்கலாம். கால்
காலப்பெயர். கடை இடப்பெயர். கட-கடை= கடந்து
செல்லும் இடம், இடம்.
அல், இல் என்னும் எதிர்மறைச்
சொற்களின் வரலாறு
அல், இல் என்னும் இருசொல்லும்
ஒலியிலும் பொருளிலும் பேரளவு ஒத்திருப்பினும்,
ஒரே வேரினின்று தோன்றியவை யல்ல. அன்மை வேறு;
இன்மை வேறு.
அல்லுதல்=பொருந்துதல், முடைதல்,
பின்னுதல். ஒல்லுதல் பொருந்துதல். ஒல்-அல்.
அல்-அள்=செறிவு. அள்-அள்ளல் =
நெருக்கம். அள்ளுதல் = செறிதல். அள்-அண்-அண்மை =
நெருக்கம். அண்-அடு. அடுத்தல் = அண்மையாதல்,
நெருங்குதல். அடுத்த = அண்மையான, இன்னொரு.
அடுத்தவன் = நெருங்கியவன், நெருங்கிய
இன்னொருவன், இன்னொருவன். அல் என்னுஞ் சொல்லும்
இங்ஙனமே அண்மைக் கருத்தி னின்று மறுபொருண்மைக்
கருத்தைப் பெறும்.
அல்லது=அண்ணியது, அண்ணிய இன்னொன்று,
இன்னொன்று.
இம் மறுபொருண்மைக் கருத்தினின்றே,
தெரிப்புக்கருத்தும் அன்மைக்கருத்தும்
தோன்றியுள்ளன.
எ-டு:
திருக்குறள் அல்லது நாலடியார்
-
தமிழ் அல்லது பிறமொழி
தமிழ் அல்லது பிறமொழி
தமிழ் அல்லாதது பிறமொழி
- |
தெரிப்பு (AlternativeChoice)
.
.
அன்மை. |
தமிழ் இன்னொன்று பிறமொழி என்னும்
கருத்தினின்று, தமிழினின்று வேறானது பிறமொழி
என்னும் கருத்துத் தோன்றி யுள்ளமை காண்க.
அன்மைப்பொருட்கு ஆகார விடைநிலை
வேண்டாவிடினும், அல்லது என்னும் சொல் சொல்லாது,
பொல்லாது, சொல்லாதது, பொல்லாதது, சொல்லாமை,
பொல்லாமை முதலிய சொற்களோ டொப்புமைகொண்டு
ஈற்றடி நீளப்பெற்றது. அதனால், பொருளும்
தெளிவுற்றது. சொல்லாது என்னும் தெரிநிலை
வினைச்சொல்
|