|
வடிவம் முற்றாயும் எச்சமாயும்
இருப்பதுபோன்றே, அல்லது என்னுங் குறிப்பு
வினைச்சொல் வடிவும் முற்றாயும் எச்சமாயு
மிருக்கமுடியும்.
அன்மைப்பொருட் சொற்றொடரில்
வரும் இரு வினை முதலையும் அன்மைப்பொருள்
சார்தலின் சொற்றெடர் தலைமாறி னும் பொருள்
மாறாது.
எ-டு:
இளம்பூரணர் உரையாசிரியரல்லர்.
உரையாசிரியர் இளம்பூரணரல்லர்.
இளம்பூரணரல்லர் உரையாசிரியர்.
உரையாசிரியரல்லர் இளம்பூரணர்.
அல் என்னுஞ் சொல்லடியாய், அஃறிணை,
அல்வழி, அன்மொழித்தொகை, அல்லகுறி என்னும்
இலக்கணக் குறியீடுகள் தோன்றியுள்ளன.
இல் என்னும் சொல், அடிப்படையில்
சிறுமை அல்லது குன்றற் பொருளது. குன்றற்
கருத்தினின்று இன்மைக்கருத்தும் தோன்றும். ஒ,நோ:
செயப்படுபொருள் குன்றியவினை= செயப் படுபொருள்
இல்லாவினை.
Less = of
smaller quantity, senseless ness = absence of sense.
இல் என்பது ஒரு சிறுமைப்பொருள்
பின்னொட்டு. எ-டு தொட்டி-தொட்டில்,
முற்றம்-முற்றில்-முச்சில். இல் என்பது
திண்மையிற் சிறிய இலைவகை. இலவு என்பது நொய்ய
பஞ்சு. இல்லி சிறுதுளை. இறை என்பது சிறிது என்னும்
பொருள்படுவது. இடுகியது இடை. இட்டிகை சிறு செங்கல்.
இட்டேறி இது வரப் பிடைப்பட்ட சிறுபாதை. உல்லி,
ஒல்லி என்பன ஒடுக்கங்குறிப் பதால், உல்
என்பதினின்று இல் என்னுஞ் சொல் தோன்றியிருக்
கலாம்.
சிறுமையுணர்த்தும் இவ் இல்லென்னுஞ்
சொல்லே, இன்மை யுணர்த்தும் குறிப்புவினையா
யிருக்கலாம்.
அல் என்னும் சொற்போன்றே, இல்
என்பதும் ஒப்புமை யமைப்பால் இல்லா, இல்லாது,
இல்லாதவன், இல்லாமை என்னும் வடிவுகளைப்
பெற்றுள்ளது.
இல், இல்லை என்னும் இருவடிவும், இருதிணை
யைம்பால் மூவிடப் பொதுவான குறிப்பு
வினைமுற்றுகளாம். இல் என்பது பாலீறு பெற்றுத்
திணைபால் எண்ணிட வேறுபாடு காட்டும்.
அல் என்பது இல் என்பதுபோல் தனித்து
நின்று பயனிலை யாகாது என்றும் பாலீறு பெற்றே
வரும்.
|