|
யிருப்பினும், படர்க்கை வினைமுற்றுகளே
பெரும்பாலும் பாலீறு கொண்டனவாகவும், ஏனை யீரிட
முற்றுகளும் பாலீறற்றனவாக வுமே யிருக்கின்றன.
இறந்தகால விடைநிலைகளெல்லாம்
இறந்தகால வினை யெச்சத்துள்ளேயே
அடங்கிநிற்றலின். அதனொடு சேர்ந்துள்ள இசின்
என்பது ஒரு துணைவினையாகவே யிருத்தல்வேண்டும். அது ஈ
என்பதே. அது உதவி வினையீறுகளுள் ஒன்றென்பது
முன்னர்க் கூறப்பட்டது.
ஆயினோர், போயினோர், மேயினோர்,
தாயினோர் என்பன போன்று, ஈயினோர் என்பதும்
படர்க்கைப் பலர்பால் இறந்தகால வினையாலணையும்
பெயராம். யகர சகரப் போலியில் அது ஈசினோர்
என்றாகி இசினோர் என்று குறுகும். பின்பு அது
இறந்தகால வினையெச்சத்துடன் துணைவினையாகச்
சேர்ந்து,
"சிறந்திசினோர்" (தொல்.295)
"உணர்ந்திசினோர்" (தொல்.601)
"அறிந்திசினோர்" (தொல்.643)
முதலிய சொற்களைப் பிறப்பிக்கும்.
தொல்காப்பியர் இவ் வினையின்
அமைப்பை முற்றும் அறியா திருந்ததினால், இசின்
என்பதை அசைநிலையாகக்கொண்டு. அதையும் சின்
என்று தவறாகப் பிரித்து,
"மியாஇக மோமதி இகும்சின் என்னும்
ஆவயின் ஆறும் முன்னிலை
அசைச்சொல்." (759)
"அவற்றுள்,
இகுமும் சின்னும் ஏனை யிடத்தொடுந்
தகுநிலை யுடைய என்மனார் புலவர்" (760)
என்று வழுப்பட நூற்பா யாத்து,
"மெய்தெரி வளியிசை அளவுநுவன்
றிசினே" (102)
எனத் தன்மையொருமை யிறந்தகால
வினைமுற்றை எண்ணீறின் றியும் அமைத்துவிட்டார்.
அதனால், பிறகாலப் புலவர்,
"வழிபடல் சூழ்ந்திசின் அவருடை
நாட்டே." (குறுந்.
11)
"கேட்டிசின் வாழி தோழி" (குறுந். 30)
எனத் தன்மை முன்னிலை வினைமுற்றுகளைமட்டுமன்றி,
|