காகம் கரைகிறது, குயில் கூவுகிறது,
மயில் அகவுகிறது, ஆந்தை கிளை கூட்டுகிறது, கூகை
குழறுகிறது, தவளை பறையடிக் கிறது, பல்லி
முற்கந்தெறிக்கிறது. குதிரை கனைக்கிறது, யானை
பிளிறுகிறது, புலி உறுமுகிறது, அரிமா உரறுகிறது என்பன
கத்தல் வினை மரபாகும்.
சோறு சாப்பிடுதல், குளம்பி(காப்பி)
குடித்தல், பலகாரம் தின்னுதல் என்பதே மரபு.
குளம்பி சாப்பிடுதல் என்பது மரபு வழுவாம்.
இப் பொலி ஒரு கோட்டை காணும், இம்
மருந்து காது வலியைக் கேட்கும், என் வண்டி பழுதுபட்டு
நூறுருபாவைக் கேட்டுவிட்டது, புதுவீடு ஒரு பெரிய
உருபாவை விழுங்கிவிட்டது. இவை போன்றனவும்
மரபுவழக்கே.
(13) சொற்றொடர் வகைகள்
பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம்
செய்யுள் நடையிலிருந்த மையாலும்,
இலக்கணமெல்லாம் செய்யுள்மொழிக்கே எழுதப்பட்ட
மையாலும், உரைநடைக்குச் சிறப்பான இலக்கணக்
கூறுகளைப் பழந்தமிழிலக்கண நுல்கள்
எடுத்துக்கூறவில்லை.
சொற்றொடர்வகையிற் பண்டைத்
தமிழிலக்கணங்கள் கூறியவெல்லாம், அறுவகைத்
தொகைநிலைத்தொடரும் எண் வகைத் தொகாநிலைத்
தொடருமே. அவற்றுள், எழுவாய்த் தொடரும் விளித்
தொடரும் வினைமுற்றுத்தொடரும் தொடரியம் அல்லது
முற்றுச் சொற்றொடராகும். ஆயின், அவை இருசொற்
றொடரான தனித் தொடரியமே.
உரைநடைக்கு இலக்கணம்
எழுதப்படாவிடினும், சொற் றொடரமைப்பு
இன்றுபோன்றே அன்றும் உலகவழக்கு மொழியில்
இருந்தது. அதனால், தனித் தொடரியம் (simple
sentence, ) கூட்டுத் தொடரியம் (compound
sentence), கலப்புத் தொடரியம் (complex
sen-tence), கலவை அல்லது கதம்பத்
தொடரியம் (mixed sentence)
என்னும் தொடரிய வகை நான்கும்; நேர் கூற்று (direct
sentence) நேரல்கூற்று (indirect
Speech) என்னும் கூற்றுவகை யிரண்டும்;
இலக்கியந் தோன்றுமுன்னரே தமிழில்
அமைந்திருத்தல் வேண்டும்.
ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும்
பலவகையில் ஒப்புமை யிருப்பதால், இதுவரை
அறியப்படாத சில தமிழ் உரைநடை யிலக்கணக்
கூறுகளை ஆங்கிலத்தினின்றே அறிய முடிகின்றது.
|