பக்கம் எண் :

70தமிழ் வரலாறு

2

திரிநிலைப் படலம்

(கி.மு. 20,000-இன்றுவரை)

குமரிக்கண்ட மாந்தர், தமிழின் ஐவகைச் சொன்னிலைக் காலத்திலும், மக்கட்பெருக்கம், இயற்கை விளைவுக்குறைவு, பஞ்சம், கொள்ளை, போர், பகை, வேற்றிடவிருப்பு, துணிசெயல் வேட்கை, வணிகம், கடல்கோள் முதலிய பல்வேறு கரணியங்களால், கிழக்கும் வடகிழக்கும் வடக்கும் வடமேற்கும் மேற்குமாகக் கூட்டங் கூட்டமாய்ப் பிரிந்துபோயினர். வடகிழக்குச் சென்ற துரேனியர் (சித்தியர்) அசைநிலைக் காலத்திலும் புணர்நிலைக் காலத்திலும், வடமேற்கிற் சென்ற ஆரியர் பகுசொன்னிலைக் காலத்திலும் பிரிந்துபோனதாகத் தெரிகின்றது. நேர் வடக்குச் சென்றவர் தமிழின் முன்னிலைக் காலத்திலும் பின்னிலைக் காலத்திலும் பிரிந்தவராத லின், அவர் சென்ற விடமெல்லாம், பல வூர்ப்பெயர்கள் இன்றும் தமிழ்ச்சொல்லாயும் அவற்றின் திரிபாயுமிருப்பதுடன், அவர் மொழிகளும் தமிழொடு சிறிதும் பெரிதும் தொடர்புடையன வாயிருக்கின்றன.

1. ஊர்ப்பெயர்கள்

தெலுங்கநாடு: சிற்றூர்(சித்தூர்), நெல்லூர், குண்டூர், ஒருகல் அல்லது ஓராங்கல் (Warangal ).

ஒட்டரம் (ஒரிசா): கடகம் (Cuttack )=வளைந்த மதில், மதில் சூழ்ந்த நகரம்.

பம்பாய்: வேளூர், வேளூரகம் (Ellora ), வேளாபுரம் (Velapur), வேளகம், வேள்(கிராமம்)-(Belgaum ), வேள்பட்டி (Belhutti). வேளா என்பது பலவூர்களின் பொதுப்பெயராயுள்ளது. சளுக்கியர் ஆண்ட பம்பாய் மண்டலப்பகுதி வேள் புலம் எனப்பட்டது.

குச்சரம்: துவாரகை (Dwaraka). இது எருமையூர் (மைசூர்) நாட்டி லுள்ள துவரையின்(துவாரசமுத்திரம்) பெயரால் அமைந்த