பக்கம் எண் :

திரிநிலைப் படலம்89

பாலீறுகள்

பெண்பாலீறுகள்:

இ = ஈ
அன்னி-அனி = அனீ அனீ-னீ
அனி-இனி = இனீ
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
பேட்டீ
தேவரானீ
மோர்னீ
ஸ்வாமினீ

முதற்காலத்தில் நெடில்களே வழங்கிவந்தமையை, வட நாவலப் பெண்பாலீறு ஒருவாறு உணர்த்தும்.

பலர்பாலீறு

உலகு-உலகம் = மாநிலம், மக்கட்டொகுதி, மக்கள்.

உலகம்-லோக் (இ.)

உலகம் என்னும் சொல் மக்கள் என்னும் பொருளிற் பலர் பாலீறாய் வரும்போது, இந்தியில் (Log) என்று எடுப்பொலி கொள்ளும்.

எ-டு: ஹம் லோக் = நாங்கள், தும் லோக் = நீங்கள்.

இலக்கண அமைதிகள்

இறந்தகால வினைமுற்றும் எச்சமும்

தமிழிற் செய்யா என்னும் வாய்பாட்டுஆவீற்று வினைச் சொல், இறந்தகால வினையெச்சமாகும். இந்தியில் இவ் வாய்பாட்டுச் சொல் இறந்தகால முற்றும் எச்சமுமாகும்.

எ-டு:

முதனிலை இ.கா. முற்றும் எச்சமும்
ஆ = வா
போல் = சொல்
ஆயா = வந்தான், வந்து.
போலா = சொன்னான், சொல்லி.

செய்து என்னும் வாய்பாட்டுச் சொல், தமிழில் ஒரு காலத்தில் முற்றாகவும் இருந்ததுபோன்றே, செய்யா என்னும் வாய்பாடும் இருந்திருக்கலாம்.

ஜாத்தா ஹை, போல்த்தா ஹை முதலிய நிகழ்கால இந்தி வினை முற்றுகள், போத்தாடு, செப்புத்தாடு முதலிய தெலுங்கு நிகழ் கால வினைமுற்றுகளை ஒருமருங்கு ஒத்தமைந்திருந்ததல் காண்க.

முன்னிலை வினை

இய என்னும் தமிழ் வியங்கோளீறு, இந்தியில் இயே என்னும் மதிப்பு ஏவலீறாகத் திரிந்துள்ளது.

எ-டு: போலியே=சொல்லுங்கள், சொல்லுக.