|
கூடாது என்று பொருள்படும் ஒல்லாது
என்னும் தமிழ் எதிர்மறை வினைச்சொல்,
தெலுங்கில் ஒத்து-வத்து எனத் திரியும். அது பின்
இந்தி யில் மத் எனத் திரிந்துள்ளது.
|
எ-டு:
|
போகவத்து
=
ஜமாத்
= |
போக வேண்டாம் (தெலுங்கு)
போக வேண்டாம் (இந்தி) |
தொழிற்பெயரும் நிகழ்கால
வினையெச்சமும்
தமிழில் ஒளஅல்ஒள ஈற்றுத்
தொழிற்பெயர் வியங்கோள் என்னும் ஏவல்
வகையாகவும் பயன்படுவதுபோல், இந்தியில் ஒளனா’
ஈற்றுத் தொழிற் பெயர் ஏவலாகவும்
ஆளப்பெறுகின்றது.
எ-டு: கர்னா =
1.செயல் (செய்கை)-தொழிற்பெயர்.
2.செய், செய்யுங்கள்-ஏவல்.
இனி, கர்னா அல்லது அதன் திரிபான
"கர்னே" வாய்பாடு எதிர்கால வினையெச்சமாகவும் (infinitive
mood) இந்தியில் வழங்குவது,
செய்யவேண்டும் என்னும் பொருளில் செய்யல்
வேண்டும் அல்லது செயல்வேண்டும் என்பது தமிழில்
வழங்குவதை ஒருபுடை ஒத்ததே.
செயப்படுபொருள் குன்றாவினை
முதனிலைகள்
இந்தியில். செயப்படுபொருள்
குன்றாவினை முதனிலைகள், ஆவ் (வா), ஜாவ் (போ)
என்னும் ஏவலொருமையுடன் கூடி. இறந்த கால
வினையெச்சப் பொருள்படும். இதில் "கர்" என்னும்
இறந்தகால நிறைவு வினையெச்ச வீறு தொக்கதாகக்
கொள்ளப்பெறும்.
எ-டு: ஸு ன் = கேள்.
ஸு ன்ஜாவ் = கேட்டுவிட்டுப்போ.
தேக் = பார். தேக்ஆவோ =
பார்த்துவிட்டு வாரும்.
தமிழில் எல்லா வினைமுதனிலைகளும் வா
போ என்னும் ஏவலொருமையுடன் கூடி நிகழ்கால
வினையெச்சப் பொருள்படும்.
எ-டு: செய்வா=செய்யவா, பார்போ=பார்க்கப்போ.
இருவா=இருக்கவா,
விழுபோ=விழப்போ.
மாறு என்னும் இடைச்சொல்
மாறு என்னும் இடைச்சொல், ஏகார
ஈறேற்றுக் கழகச் செய்யுள்களில் ஏதுப்பொருளில்
வழங்குகின்றது (புறம். 4, 20, 22, 92, 93, 271, 380, நற்.231)
"அனையை யாகன் மாறே." (புறம்.4)
|