பக்கம் எண் :

திரிநிலைப் படலம்91

இதற்குப் பழைய வுரையாசிரியர் "அத்தன்மையை யாதலால்" என்று பொருளுரைத்து, "மாறென்பது ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல்" என்று இலக்கணக்குறிப்பும் வரைந்துள்ளார். சேனாவரையர் "மூன்றாம் வேற்றுமைப்பொருட்கண் வரும் மாறு" என்றும், நச்சினார்ககினியர் "மாறென்னும் இடைச்சொல் வினையை அடுத்துக் காரணப்பொருள் உணர்த்திநிற்றலின்" என்றும், இலக்கண விளக்க வுரையாசிரியர் "மூன்றாவதன் பொருளவாய் வரும் மாறு" என்றும் உரைத்துள்ளனர்.

இந்தியில், "கே" என்னும் உருபொடு சேர்ந்து வரும் "மாரே" என்னுஞ் சொல், ஏதுப்பொரு ளிடைச்சொல்லாகவே வழங்கு கின்றது.

எ-டு: உஸ் ஆத்மீகே மாரே = அந்த மாந்தனாலே.

இஸ் பத்பூகே மாரதே = தீநாற்றத்தினால்.

சொற்றொடர் அமைதிகள்

அடுக்குத்தொடர்:

கர் கர் = வீடுவீடாய்.

படேபடே = பெரியபெரிய.

ஜப்ஜப்......தப்தப் = எப்போதெப்போது.... அப்போதப்போது.

காத்தே காத்தே = சாப்பிட்டுச் சாப்பிட்டு.

சொன்முறை

எழுவாய்-செயப்படுபொருள்-பயனிலை என்னும் முறையிலேயே இந்திச் சொற்றொடர்களும் அமைந்துள.

எ-டு: ராம் பாத் காத்தா ஹை = இராமன் சோறு உண்கிறான்.

மரபுத்தொடர்

தாந்த் கட்டே கர்தோ=பல்லைக் பிடுங்கிவிடு, செருக்கடக்கு.

ஜான் லேக்கர் பாக்=உயிரைக் கையிலேந்திக் கொண்டு ஓடு.

பழமொழிகள்

தமிழ் இந்தி
ஆடமாட்டாத தேவடியாள் கூடங் கோணல் என்றாளாம்.
ஆண்டிகள் கூடி மடங்கட்டினாற் போல்.
ஒருகை தட்டினால் ஓசை கேட்குமா?
நாச்சை ந ஆவே அங்கணவே டேட்.
.
பகுத்ஸே ஜோகி மட் உஜாட்.
.
ஏக் ஹாத்ஸே தாலீ நஹீன் பஜ்தீ.