தமிழ்
|
இந்தி
|
ஓர் உறையில் இரு கத்தியா?
கழுதை குதிரையாகுமா?
காரியம் முடியும்மட்டும் கழுதை.
கையையும் காலைப்பிடிக்க
வேண்டும்.
குத்துவிளக்கிற்கும் குண்டிக்குக்கீழ் இருட்டு.
சேதாவை (பசுவை)க்கொன்று செருப்பைத் தானம்செய்ததுபோல்.
அறத்திற்கு (புண்ணியத்திற்கு)க்
கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் (பதம்)பார்க்கிறதா?
விளக்கைப் பிடித்துக்கொண்டு
கிணற்றில் விழலாமா? |
ஏக் மியான்மே தோ தல்வார் நஹீன்.
நஹீன்கதாபீ
கோடாபன்சக்தாஹை
ஸரூரத்கே வக்த் கதேகோ பீ
பாப் பனானா பட்தா ஹை.
.
சிராக் தலே அந்தேரா.
.
காய்
மார்க்கர் ஜூத்தா தான்.
.
தான்கீ பச்சியா கா தாந்த் நஹீன்
தேக்கா ஜாத்தா.
ஜான் பூஜ்கர் குவேம்மே கிர்னா. |
இதுகாறும் காட்டியவற்றால், இந்தியின்
மூலமொழி வட திரவிடமாகவே யிருந்திருத்தல்
வேண்டுமென்றும், சேய்மையினா லும்
காலக்கடப்பினாலும் அது நாளடைவில் ஆரிய
வண்ணமாய் மாறிவிட்டதென்றும், உய்த்துணர்ந்து
கொள்க.
12. வடதிரவிட மொழிகள் ஆரியமாய் மாறியமை
1906ஆம் ஆண்டு இந்திய மொழியாய்வுக்
கணக்கு (Linguistic Survey of
India) எடுத்த கிரையர்சன் துரைமகனார்,
அரைத்திரவிட நடைமொழிகள்(Semi
Dravidian Dialects) என்னும்
தலைப்பின்கீழ்ப் பின்வருமாறு வரைந்திருப்பது,
திரவிடருக்கும் தமிழருக்கும் ஓர்
எச்சரிக்கையாயுள்ளது.
"வட இந்தியாவிலுள்ள பல திரவிட
மரபினர் தத்தம் இன மொழியை விட்டுவிட்டு
ஏதேனுமோர் ஆரிய நடை மொழியைப்
பேசிவருகின்றனர் என்னும் உண்மை, ஏற்கெ னவே
எடுத்துரைகக்கப்பட்டது. ஹலபீ எனப்படும் மொழி
இதற்கொரு நல்ல எடுத்துக்காட்டு. அது
இவ்வாய்வுக் கணக்கில் மராத்தியொடு
சேர்த்துக் கூறப்படும் அது மராத்தியினாலும்
சத்தீசகடியினாலும் மிகுதியும் தழுவப் பட்ட கலவை
மொழி.
"இங்கு அதுபோன்ற நடைமொழிகளுள்
இரண்டைத் திரவிடக் குடும்பத்திற்குப்
பிற்சேர்க்கையாகக் குறிப்போம். இதனால்,
அத்தகைய மொழிகளில் ஆரியத்தின் தாக்குறைவு
|