பக்கம் எண் :

திரிநிலைப் படலம்93

எத்துணை நிறைவாகவுள்ள தென்பதை, மாணவன் அறிந்து கொள்ள முடியும். அவ் விரு நடைமொழிகளும், அமரவோத் தியைச் சேர்ந்த லதாடி அல்லது ரத்தாடி எனப்படுவதும், நரசிங்கபுரத்திலும் சிந்துவாரத்திலும் பேசப் படும் பரியா எனப்படுவதும் ஆகும். இவ்வாய்வுக் கணக்கிற்காகத் தொகுக் கப்பெற்ற குறிப்பின்படி, அவற்றைப் பேசுவோர் தொகை வருமாறு:

லதாடி(Ladhadi) 2,122
பரியா (Bharia) 330
மொத்தம் 2,452

இவ் விரு நடைமொழிகளும் முன்பு கோண்டியோடு (Gondi) சேர்க்கப்பட்டிருந்தன. எனினும், இன்று அவை முற்றும் ஆரிய வண்ணமாய்விட்டன.

வடதிரவிடத்தின் ஆரியக் கருநிலை

இந்திச் சொற்களும் சொற்றொடரமைதிகளும்

வட திரவிட மூலமொழி இன்றின்மையால், அதன் நெடுஞ் சேய்மைக் கான்முளைகளுள் ஒன்றான இந்தி இங்குக் காட்டப் பெறுகின்றதென அறிக.

(1) சில சொற்கள்

மூவிடப்பெயர்கள்:

தமிழ் இந்தி மேலையாரியம்
தன்மை
யொருமை
நான்
.
மைன்
முஜ், மே(வே.அடி)
OS. mi, me, E.me my, Skt. mam, mama.
முன்னிலை
யொருமை:
நான்
.
தூ
.
O.S., O.E., On., Goth. thu. L. tu, E. thou, Skt. tvam,

சுட்டுச்சொல்:
அண்மை:
சேய்மை:
.

இதோள்
இதோளி அதோள் இதோளி
ஹிதர்
உதர்
.
.
OE. hider,On. hethra, Goth. hidre, E. hither, L. citra, Skt. atra OE. thider theader, E. thither, Skt. tatra