7. Dress என்னும் ஆங்கிலச்சொல் dresser என்னும் பழம் பிரெஞ்சுச் சொல் வாயிலாக directus என்னும் இலத்தீன் சொல்லினின்று திரிந்ததாகும். Direct, to put Straight. |
10. நடு-நடுவு-நடுவம். இம்மூன்றையும் பெயராகவும் குறிப்புப் பெயரெச்சமாகவும் பயன்படுத்தலாம். நடுவம் என்பது பெயரெச்ச வடிவில் நடுவ என்று ஈறு கெடும். |
11. அசையல் என்பது எதிர்மறை வியங்கோள்; ஈரெண் பொது. |
21. வரிசையாக, வரிசையமைக என்றும் சொல்லலாம். |
30, 31 நீளெட்டு, குற்றெட்டு என்றாலும் போதும். வைக்க என்றும் இடுக என்றும் சொல்லலாம். எட்டு நீள்க, எட்டுக் குறுக என்றும் சொல்லலாம். |
33. அடியிரட்டுதல்-இட்ட அடியின்மேல் அடியிடுதல்: To step without advancing, to mark time. "அடியிரட்டித் திட்டாடுமாட்டு" (புறப்பொருள் வெண்பா மாலை. 2.8). |
34. ஒருகை வணக்கத்திற்குக் கையெடுத்தல் என்னும் சொல் மிகப் பொருத்தமானதாம். |
45. நோடு-to test-உண்ணோடு-to inspect. |
47. துலவுதல்-துலாக்கோல் போல் தொங்கப் பிடித்தல், to let rifles hang balanced in one hand. இது வழக்கற்றுப் போன பழஞ்சொல். துல்-துலா-துலாம். துல்-துலை-ஒப்பு. துலாக்கோல் (தராசு). தோல் என்னும் இந்திச்சொல் துல் என்பதன் திரிபே. |
43. படைக்கலம் என்பது arm என்பதுபோல பொதுச்சொல், துப்பாக்கி என்பது துபக் என்னும் துருக்கிச் சொல். துமுக்கி என்பது தமிழ்ச்சொல். |
44. காவல்மேல் என்பது வேலைமேல் என்பது போன்றவழக்கு. ஏவல்வினைகள் செய்ய, செய்க என்னும் இருவடிவில் உள்ளன. இவை ஈரெண் பொது. சதளம் என்னும் தொகுதிப் பெயரை ஒருமையாகக் கொண்டு செய் என்னும் ஒருமை வடிவிலும் ஏவலாம். பயிற்சியாசிரியர் வேண்டிய திருத்தமும் செய்துகொள்ளலாம். |