பக்கம் எண் :

117

25
திருக்கோவில்களில் தமிழ்ச் சொற்கள்
 

தேவஸ்தானம்

-

தேவகம், திருக்கோவில்

உற்சவங்கள்

-

திருவிழாக்கள், விழாக்கள்

நிர்வாக அதிகாரி

-

செயல் அலுவலர்,ஆள்வினைஞர்,
கருமத் தலைவர்

கர்ப்பகிரகம்

-

கருவறை, உண்ணாழிகை

பூர்த்தி

-

நிறைவு

ஆலய நிர்வாகிகள்

-

கோவில் கருமத் தலைவர்கள்

பசலி

-

பயிராண்டு

பஞ்சாங்கம்

-

ஐந்திறம்

பிரதோஷம்

-

மசண்டை

அமாவாசை

-

காருவா

கார்த்திகை

-

ஆரல், அறுமீன்

ஷஷ்டி

-

அறமி

வசந்தோற்சவம்

-

இளவேனில் விழா

மிதுன லக்னம்

-

ஆடவையோரை

சித்திரா பௌர்ணமி

-

மேழ மதியம், மேழ வெள்ளுவா

அக்னி நக்ஷத்திரம் ஆரம்பம்

-

கத்தரித் துவக்கம், எரிநாள் தொடக்கம்

சீதகும்பம்

-

குளிர் கும்பம், தண்குடம்

நடராஜர் அபிஷேகம்

-

நடவரசு திருமுழுக்கு
ஆடலரசு திருமுழுக்கு

சுவாமி தீர்த்தம்

-

இறை தூநீர்

வசந்தோற்சவத்வஜ ஆரோஹணம்

-

இளவேனில் விழாக் கொடியேற்றம்

ஸ்ரீ தேவசேனா அம்மன் திருக்கல்யாணம்

-

திருத்தெய்வயானை திருமணம்

விருச்சிக லக்னம்

-

நளியோரை

ஸ்ரீவள்ளி

-

திருவள்ளி

ரதாரோஹணம்

-

தேர் ஏற்றம்

த்வஜஅவரோஹணம்

-

கொடி இறக்கம்

கும்பாபிஷேகம்

-

குடமுழுக்கு