செயப்பாட்டுவினைப் பொருளைப் பெரும்பாலும் செய்வினை வடிவாற் குறிப்பதே, தொன்றுதொட்டுவரும் தமிழ் வழக்காம். |
| எ-டு : | புலி கொன்ற மான் (=புலியாற் கொல்லப்பட்ட மான்). தச்சன் செய்த பெட்டி (=தச்சனாற் செய்யப்பட்ட பெட்டி). |
ஆங்கிலத்திலும் பல பிற மொழிகளிலும் செயப்பாட்டுவினை வடிவம் பெரும்பாலும் ஒன்றே. தமிழிலோ, அவ் வினை நிகழ்கால வினையெச்சத்தோடு கூடிய துணைவினை, முதனிலைத் தொழிற் பெய ரோடு கூடிய துணைவினை, என்னும் மூவடிவு கொள்ளும். |
இனி, சில செயல்கள் பற்றி, எழுவாயும் அதன் வினையுமின்றிச் செயப்படு பொருளையே செய்ததுபோலச் செய்வினை கொடுத்துக் கூறுவதும், தமிழ் வழக்காம். இதனையே |
| "செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கியன் மரபே" |
என்றார் தொல்காப்பியர். |
எ. டு: திண்ணை மெழுகிற்று, கலங் கழுவிற்று. |
இதனை, இப்போதுதான் வந்திற்று, சற்று முன்புதான் தூங்கி எழுந்திற்று, எனத் தன்மை யொருமை வினையைப் படர்க்கை யொன் றன்பால் வினையாகக் கூறும் தமிழ் வழக்கிற் கொப்பாகக் கொள்ளினும் குற்றமின்று. வந்திற்று, எழுந்திற்று என்பன, கொச்சை நடையில் வந்திச்சு எழுந்திச்சு என வழங்கும். |
ஆங்கிலத்திற் செயப்பாட்டுவினையின் பெயராயுள்ள passive என்னும் சொல்லின் அடியான pat என்னும் இலத்தீன் வேர்ச் சொல்லே, படு என்னும் தமிழ்ச் சொல்லை ஒலியாலும் பொருளாலும் ஒத்திருப்பது கவனிக்கத்தக்கது. |
உரிச்சொல் |
பெயர்ச்சொல், வினைச்சொல், பெயர்க்கும் வினைக்கும் உறுப்பாக வரும் இடைச்சொல் என இலக்கணவகைச் சொல் உண்மையில் மூன்றே. பெயரையும் வினையையும் தழுவிவரும் சொல்லெல்லாம் பெயரெச்ச மாகவும் வினையெச்சமாகவும் நின்று, பெயருள்ளும் வினையுள்ளும் அடங்கும். |
தொல்காப்பியத்தில் உரிச்சொல்லாகக் காட்டப்பெற்றவை யெல்லாம் பெயர் வினை யிடையுள் அடங்குகின்றன. ஏனை மூன்றிற்குப் போல் உரிச்சொற்குத் தனி இயல் வரையறையில்லை. |
உரிச்சொற்கு இலக்கணங் கூறப்புகுந்த தொல்காப்பியர், |