| முகவை. ஆடல்வல்லான். | | * உலக மொழியாக விளங்க esperanto எனும் மொழி கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. உலக மொழிகளின் திறம்யாவும் வடித்தெடுக்கப் பட்ட மொழியிதுவென்ப தறிவோம். தமிழின் திறம், வளம் - இம் மொழியாக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டதா? இல்லாவிடில் உலக மொழி யாகத் தமிழை ஆக்கிட இயலும் வழிவகைகளைக் கூறிட வேண்டு கிறேன். அயல் நாட்டாரும் நயந்து ஏற்றிடும் வகையில் தமிழை எளி தாக்கித் தற்போதைய esperantoவின் இடத்தைப்பெற ஆய்வு நடத்த முடியுமா? | | ஆங்கிலம் உலக மொழியாகப் பரவாத 17ஆம் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில், மேனாட்டு மொழியறிஞர் பெரும்பாலும் ஐரோப்பிய மொழிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு, volapuk, esperanto, ido, esperantido, interlinqua, novial முதலிய செயற்கை மொழிகளை உலக மொழிகளாகப் பயன்படுமாறு படைத்தமைத்தனர். இக்காலத்தோ, ஆங்கிலம் உலக மொழியாகிவிட்டது. இனி அதன் இடத்தை வேறொரு மொழி பெற முடியாது. "எல்லாரும் பல்லக்கேறினால் எவர் பல்லக்குத் தூக்குவது?" தமிழ் எளிய முப்பான் ஒலிகளைக் கொண்ட உலக முதற்றனிச் செம்மொழியாதலாலும், தமிழர் இனிமேல் ஆங்கிலர்போல் உலகமுழுவதும் பரவவும் பன்னாடுகளை ஆளவும் இயலாதாதலாலும், தமிழை உலக மொழியாகக் கருதுவது "வானத்து மீனுக்கு வன்றூண்டி லிடுவதே." தமிழ்நாட்டில் தூய்மையாக வழங்குவதும், உலகமெங்கும் கற்கப்படுவதுமே, தமிழ் இனி யடையத்தக்க பேறாம். | | சு.ஆ. திருவாரூரன், திருப்பாதிரிப்புலியூர். | | * சிலப்பதிகாரத்தில் 'கொலைக் களக் காதை'யில் 'சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்' என்று கோவலன் கண்ணகியிடம் கூறியதாகக் காணப்படுகின்றது. சிறு முதுக் குறைவி என்பது யாரைக் குறிக்கின்றது? கண்ணகியையா? அல்லது மாதவியையா? கண்ணகியைக் கூறுவதானால் அது ஏன் மாதவியைக் கூறியதாகக் கருதக் கூடாது? | | "சிறு முதுக்குறைவி" என்பது கண்ணகியையே குறிக்கின்றது. கோவலன் முறைப்படி மணந்த குல மனைவி கண்ணகியே. அவன் அவளை மடந்தைப் பருவத்திலேயே விட்டுவிட்டு மாதவியொடு கூடிப் பதினைந்தாண்டு போற் கழித்தான். கானல் வரிப்பாட்டிறுதியில், மாதவியை "மாயப் பொய் பல கூட்டு மாயத்தாள்" என்று கூறித் துறந்தான். மதுரை வழிப்போக்கில் கௌசிகன் கொணர்ந்து நீட்டிய மாதவி முடங்கலைப் படித்த பின்பும், "தன்றீதிலள்" என்று மட்டும் சொன்னானே யொழிய அவளை மீண்டுங் காதலித்தானல்லன். கூடி வாழாதும் சிலம்பொழிந்த அணிகலன்களை யெல்லாம் கவர்ந்தும், கண்ணகிக்கே கொடுமை செய்தான். அங்ஙனமிருந்தும் அவள் ஆற்றியிருந்ததும், "சிலம்புள கொண்ம்" எனச் சொன்னதும், மதுரைக் கெழுக என்றவுடன் எழுந்ததும், ஆறைங்காதம் அருவழி நடந்ததும், குரவரையும் பிற உறவினரையும் பிரிந்து அயலார் ஊரில் தனித்திருக்க நேர்ந்ததும், கணவன் வழிபாட்டிற் கடுகளவுங் | | |
|
|