பக்கம் எண் :

கேள்விச் செல்வம்149

     * "தொல்காப்பியம்" தனித்தமிழில் எழுதப்பட்டுள்ளதா?
     தொல்காப்பியம் ஓர் ஆரியரால் எழுதப்பட்ட சார்பிற் சார்பு நூல். அதற்குமுன் தனித்தமிழ் முதனூலும் வழிநூலும் நூற்றுக் கணக் கான சார்பு நூல்களும் அழிக்கப்பட்டுப் போயின. தொல்காப்பியத்தி லுள்ள வடசொற்களும் இருபதிற்கு மேம்பட்டவையல்ல. அந் நூலின் விரிவை நோக்கும்போது அவை பொருட்படுத்தத் தக்கனவாகா. இருப் பாணியுள்ள மர நாற்காலியும் மர நாற்காலி யென்றே சொல்லப்படுவது போல், ஒரு சில வட சொற்களுள்ள தொல்காப்பியமும் தனித்தமிழ் நூலென்றே கொள்ளப்படும்.
     மேலும், தொல்காப்பிய வடசொற்கள் தமிழுக்கின்றியமையாதனவு மல்ல. அவை வேண்டாது புகுத்தப்பட்டனவாதலின், அவற்றை விலக்க வுங் கூடும்.
     உலகில், பிற மொழிச் சொல்லின்றி முழுத் தூய்மையாய் எழுதக் கூடிய மொழி தமிழ் ஒன்றே. வட மொழிச் சொற்களுள் ஐந்திலிரு பகுதி தமிழாயிருப்பதை நோக்கும்போது, தொல்காப்பிய வடசொற் றொகையால் அதன் தனித்தமிழ் நடை இழுக்குறுவதன்றென்க.
     * கம்பராமாயணம் புகழ் பெற்றதுபோல் பாமர மக்களிடம் கழக இலக்கியங்கள் புகழ் பெறாததின் ஏதுவென்ன?
     கழக விலக்கியம் கம்பராமாயணம் போற் புகழ் பெறாமைக்குக் கரணியங்கள் (காரணங்கள்),
     1) ஆரியம் உயர்த்தப்பெற்றதும் தமிழ் தாழ்த்தப்பட்டதும்.
     2) இராமாயணப் பாட்டுடைத் தலைவன் இறைவன் தோற்றரவு (அவதாரம்) என்னும் நம்பிக்கை.
     3) கம்பன் கல்வித் திறம்.
     4) இராமாயணக் கதையின் விரிவும் பொருட் பன்மையும்.
     5) இற்றைத் தமிழ்ப் பொதுமக்களின் தாழ்ந்த அறிவு நிலை.
     * தாய்மொழிக்குத் தீங்கு இழைப்பவர்களை என்ன பெயரிட்டு அழைக்கலாம்?
     தாய்மொழிக் கொலைஞர் என்றழைக்க.
     * "மறை"யின் பொருள் விளக்கமென்ன?
     கல்லா மக்கட்கு மறைவாயிருக்கும் பொருள்களை விளக்குவது மறை.
ச. கி. வேணி இளம்பரிதி.
     * "இராவண காவியம்" பற்றித் தங்கள் கருத்து யாது? அதனைத் தடை செய்தது சரியா?
     இராமாயணக் கதையால் தென்னாட்டார்க்கு அல்லது தமிழர்க்கு இழிவு ஏற்பட்டுள்ளதென்று கருதி, அதனை நீக்குவது இராவண காவியம். இராமாயணம் ஒரு வகுப்பாரால் மறை நூலொத்த மத நூலாகக் கொள்ளப்பெறுவதால், அவர்