பக்கம் எண் :

34தமிழ் வளம்

சொல்லமைவு

     'அம்' வேர் அல்லது அடி முதனிலை. 'அவல்', அமல் என்பதன் திரிபாகி மேன் முதனிலையாக நிற்கும் தொழிலாகுபெயர். 'ஐ' பண்பி யீறு. லகரம் ரகரமானது போலித் திரிபு.

சொல் வரலாறு :

     அம்முதல் = அமுங்குதல், அமுக்குதல்.

     அம் - அம்மி = அமுக்கி யரைக்குங் கல்.

     அம் - (அமு) - (அமுகு) - அமுங்கு - அமுக்கு - அமுக்கம்

     அமுக்கு - அமுக்கல் - அமுக்கலான் = கொப்புளங்களை அமுங்கச் செய்யும் தழை.

     அம் - அமிழ் - ஆழ் - அழுந்து - அழுத்து - அழுத்தம்.

     அமுக்குவதனாலும் அழுத்துவதனாலும் ஓரிடம் பள்ளமாகும்; ஒரு பொருள் தட்டையாகும்.

     அம் - அமல் - அவல் = 1. பள்ளம். "அவலிழியினும் மிசை யேறினும்." (புறம். 102 : 3). 2. விளைநிலம். 3. குளம். 4. தட்டையாக இடித்த நெல்லரிசி அல்லது கம்பரிசி. பள்ளக் கருத்தினின்று குள்ளக் கருத்துந் தோன்றும்.

     ஒ.நோ : பள் - பள்ளம். பள் - பள்ளை = 1. குள்ளம். 2. பள்ளையாடு. பள்ளையன் = குறுகித் தடித்தவன். பள்ளையாடு = குள்ளமான ஆடு. குள்ளக் கருத்தினின்று சப்பைக் கருத்துத் தோன்றும்.

     ம - வ., போலி ஒ.நோ : செம்மை - செவ்வை.

     சும - சுமல் - சுவல் = சுமக்குந் தோட்பட்டை.

     அவல் - (அவலை) - அவரை = சப்பையான அல்லது தட்டை யான காய்வகை.

     ஒ.நோ : அயில் - அயிலை - அயிரை.

     ல - ர, போலி.

     அவரை வகைகளிற் சில உருண்டு திரண்டிருப்பினும், பெரும் பான்மை நோக்கி அவை விலக்காகக் கொள்ளப்பட்டன. மேலும், பிஞ்சு நிலையிலேயே சமைக்குமாறு மருத்துவ நூல்கள் கூறுவதால், எல்லா வகைகளும் பிஞ்சு நிலையில் சப்பையாகவே யிருத்தலை நோக்குக.

     ஒவ்வொரு பொருளும் அதன் சிறப்பியல்பு பற்றியே பெயர் பெறுவது மரபு. வாழை, கத்தரி, முருங்கை, வெண்டை, பூசணி, சுரை, பீர்க்கு, புடலை, பாகல் முதலிய பிற காய்வகைகள் எல்லாவற்றோடும் ஒப்புநோக்கி, அவரை யொன்றே தட்டையா யிருத்தலைக் கண்டறிக.

     பள்ளம் என்பது ஒன்றன் மேல்மட்டத்தின் தாழ்வு; குட்டை என்பது ஒன்றன் உயரத்தின் தாழ்வு; சப்பை என்பது ஒன்றன் திண் ணத்தின் அல்லது புடைப்பின்