பக்கம் எண் :

போலிக யுருப்படிகள்51

தமிழ்ச்சொல் மூலமாயிருப்பதினின்று, தமிழின் தொன்மையையும் முன் மையையும் அறிக.

திருத்தம்:

     பதம், பாதம், பதவி, பதனம் என்னும் தென்சொற்களின் திரிவான பத, பாத, பதவீ, பதன என்னும் வட சொற்களை, அவற்றின் மூலமான தென்சொற்கட்கே மூலமெனச் சென்னை யகரமுதலியிற் குறித்திருப்பது, மூல வழு என அறிக.

5. பொறு

    

(1)

சொல் : பொறு

 

(2)

சொல்வகை : (part of speech or word-class) - வினை - செயப்படு பொருள் குன்றா வினையும் (transitive verb) செயப்படுபொருள் குன்றிய வினையும் (intransitive verb).

    

(3)

புடைபெயர்ச்சி : (conjugation) - 15ஆவது வகை. பொறுக் கிறேன் (நி.கா.), பொறுத்தேன் (இ.கா.), பொறுப்பேன் (எ.கா.)

 

(4)

பொருளும் ஆட்சி மேற்கோளும் : (meanings and illustrative quotations)

     செயற்பெயர் வடிவு : (Gerundial form)

     பொறு-த்தல், (செ.குன்றா வி.) 1. சுமத்தல், to bear, sustain. "சிவிகை பொறுத்தானோ டூர்ந்தா னிடை" (குறள். 37). "இசையிலா யாக்கை பொறுத்த நிலம்" (குறள். 239). 2. தாங்குதல். to prop, to support, "ஆலத்து... நெடுஞ் சினை வீழ்பொறுத்தாங்கு" (புறநா. 58). 3. அணிதல், to put on. "அம்மணி பொறுத்திரென் றறைந்தான்" (உபதேசகா. உருத்திராக். 44). 4. உடன் கொண் டிருத்தல், to continue, to possess, as one's own body."பொறுக்கி லேனுடல் போக்கிடங் காணேன்" (திருவாச. 23:6). 5. துன்பம் பொறுத்தல். to endure, suffer. 6. குற்றம் பொறுத்தல், to bear with, to put up with. 7. இளக்காரங் கொடுத்தல், to indulge to allow. 8. மன்னித்தல், to excuse, forgive, pardon. "தம்மை யிகழ்வார்ப் பொறுத்தல் தலை" (குறள். 151). 9. பிற கருத்து வேறுபாட்டை அல்லது மத வேறுபாட்டைப் பொறுத்துக் கொள்ளுதல், to tolerate. 10. பொறுப்பு (உத்தரவாதம்) ஏற்றல், to take responsibility to be accountable for. 11. காலந் தாழ்த்தல், to delay, to postpone. 12. உவமையாகப் பெறுதல், to be similar. "உலகம் பொறுக்காத தோளாய்" (சீவக. 402). 13. அழுத்துதல், to press heavily, as a load.

     (செ.குன்றிய வி.) 1. பொறுமையாயிருத்தல், to be patient, exercise forbearance. 2.வினையிடை நின்று கொள்ளுதல். to stop, wait halt in doing anything. 3.விலை கொள்ளுதல், to cost, as an article; to be spent or expended on. 4. தோணி தட்டிப்போதல், to run aground, as a vessel, to strand. 5. மாட்டிக்