கொள்ளுதல், to become fixed, jammed, wedged in (W.) 6. கடமையாகச் சுமருதல், to devolve upon, as a duty resposibility expense. 7. இணங்கி யிருத்தல், to consentyield, comply with 8. மிகுந்திருத்தல், to be excessive. 9. கனத்தல், to be heavy, weighty. |
ஏவலொருமை (imperative singular) |
சற்றே பொறு, wait a little. |
பெயரெச்சம் : (adjectival participle) |
(இ.கா.பெ.) இது அவனைப் பொறுத்த கருமம் (காரியம்), this is devolved on him. பொறுத்த குடும்பம், a large burdonsome family. பொறுத்த சுமை, load that presses heavily. |
வினையெச்சம் : (Adverbial Participle) |
இ.கா.வி. (past participle). இருநாள் பொறுத்துவா., come after two days. நி.கா.வி. (infinitive mood). அடிபொறுத்தாலும் வசவு பொறுக்க முடியாது. பொறுக்க உண்டுவிட்டாள். He has taken excessively. பொறுக்க மிதித்தல், to tread hard, with pressure. |
செயற்பெயரும் தொழிற்பெயரும் (gernud and verbal noun) |
| "சிறியோர் பெரும்பிழை செய்தன ராயிற் பெரியோ ரப்பிழை பொறுத்தலு வரிதே." | |
(வெற்றி வேற்கை. 32) |
| "சிறியோர் செய்த சிறுபிழை யெல்லாம் பெரியோ ராயிற் பொறுப்பது கடனே" | |
(வெற்றிவேற்கை. 31) |
குற்றம் பொறுக்கை பெரியோர் இயல்பு. |
தொழிற் பண்புப்பெயர் : (abstract noun). |
பொறுப்பு, responsibility (உத்தரவாதம், வ.). |
பொறுப்பாளி. a responsible person பொறுப்புக்காரன் (யாழ. அக.) பொறுப்புள்ள பதவி. a responsible post. பொறுப்புள்ளவன். one in a responsible post or place of trust, a responsible man. பொறுப்பற்றவன், an irresponsible man. பொறுப்பற்ற தனம், irresponsibility, indifference to a trust. |
பொறுமை, patience. பொறாமை. எ.ம. (neg) intolerance,,nvy, jelousy பொறுமைசாலி. patient person. பொறுமைக்காரன், patient man (W.). பொறுதி. forbearance, forgiveness. |
தொழிலாகு பெயரும் அதன் திரிபுகளும் : (Metorymical verbal noun and its derivatives) |
பொறை = பெ. 1. சுமை(பாரம்). (திவா.) "குழையு பிழையும் பொறையா" (கலித். 90); burden. load.. 2. கனம், "பொறை தந்தன காசொளிர் பூண்" (கம்பரா. உயுத். அதிகா. 40); weight, heaviness. 3. சூல் (கருப்பம்) pregnancy (சூடா.). |