பக்கம் எண் :

போலிக யுருப்படிகள்53

4. சிறு குன்று, "அறையும் பொறையும் மணந்த தலைய" (புறநா. 118); hillock.

5. மலை. "நெடும் பொறை மிசைய குறுங்காற் கொன்றை" (ஐங்குறு. 430); mountain. 6.ஞாலம் (பூமி. வ. பிங்.). "பொறைதரத் திரண்ட தாரு" (இரகு. தசரதன் காப. 50), earth. 7. துன்பந்தாங்குந் தன்மை. "வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை" (குறள். 153), forbearance. 9. அடக்கம். "பொறையு நாணு நீங்கினார்" (கம்பரா. உயுத் மிட்சி. 38); modesty meekneas. 10. வலிமை. "போதகாதிபன் முதலைவாயிடைப் பொறை தளர்ந்து" (பாரத. ஆதி. வேத்திரகீய. 1); strength, fortitude.

     பொறை - பொற்றை = பெ. 1. கற்பாறை (திவ். திருச்சந். 52. வ்யா) rock. 2. சிறுமலை (பிங்.). "பொற்றைமால் வரைகளோவென் புயநெடும் பொருப்பு மம்மா" (கம்பரா. இலங்கை காண். 22); hillock, mound 3. மலை. (பிங்.) "பொற்றையுற் றெடுத்தான்" (தேவா. 1218.10); mountain.

     "Atlas.... (Atlas-antos (1) Greek god of the older family. who held up pillars of universe; (2) the mountain in Libya regarded as supporting the heavens)"

     "Atlantic... 1. Pertaining to mount Atlas in Libya; hence applied to sea near western shore of Africa, & later to whole ocean between Europe and Africa on east & America on west... (f. L. f. Gk. Atlantikos. f. Atlas)"

என்று எருதந்துறைச் சிற்றகரமுதலி (the concise oxford dictionary) குறித்திருத்தல் காண்க.

     பொறையன் = பெ. 1. சுமப்பவன். "புன்னிலைப் பவத்துக் கெல்லாந் தானொரு பொறையனாகி" (உபதேசகா. சிவபுண். 344); bearer, sustainer. 2. மலையரசனான சேரன். "யானைக் கடுமான் பொறைய" (புறநா. 53); Cera king, as lord of the mountainous region in the Tamil country. 3. பொறுமைக்கும் பொறைக்குஞ் சிறந்த தருமபுத்திரன்; Dharmaputra, the eldest of the the Pandavas, as embodiment of patience.

     குறும்பொறை = பெ. சிறுமலை (பிங்.), "வரையக நண்ணிக் குறும் பொறை நாடி" (பதிற்றுப். 74 : 7)

     குறும்பொறை நாடன் = முல்லைநிலத் தலைவன் (இறை. 1 : 18) chief of the sylvan or pastral tract.

     இரும்பொறை = பெ. சேரர் பட்டப் பெயர்களுள் ஒன்று (பதிற்றுப். 89 : 9). எ-டு : சேரமான் கணைக்காலிரும்பொறை; a title of the Cera kings

     பொறையாளன்=பெ. 1. பொறுமைசாலி 2. தருமபுத்திரன் (பிங்.).

     பொறையாட்டி = 1. பொறுமையுள்ளவன். "சுருங்கும் மருங்குற் பெரும் பொறை யாட்டியை" (திருக்கோவை. 353); patient woman. 2. காவு (பலி)