பக்கம் எண் :

54தமிழ் வளம்

கொடுக்கும் பூசாரிப் பெண். "கானப்பலி நேர்க்கடவுட் பொறையாட்டி வந்தாள்". (பெரியபு. கண்ணப். 65); priestess who offers animals to god in sacrifice.

     பொறையிலான் = பெ. 1. பொறுமையில்லாதன், impatient person.. 2. வேடன், savage hunter.

     பொறைநிலை = பெ. மனத்தை ஒரு வழிப்படுத்துதல் (தாரணை. வ.); concentrated attention in yogic meditation.

     வினையாலணையும் பெயர்: (participial noun or appelativetive verb).

     "பொறுத்தார் புவியாள்வர்" "பொறுத்தார் நாடாள்வர், பொங்கினார் காடாள்வர்" (பழமொழிகள்). பசி பொறுக்காதவன் (எ.ம), one who can not bear hunger.

கூட்டுச்சொல் : (compound words)

     எ-டு : இரும்பொறை, குறும்பொறை, நெடும்பொறை, பொறையிலான்.

இணைமொழி : (words in pairs)

     எ-டு : அறையும் பொறையும், பெ.

தொடர் மொழி : (phrase)

     எ-டு : பொறுப்பற்றதனம், பெ.

மரபு வழக்கு : (idioms)

     பொறுத்திரு-த்தல் (செ.குன்றிய வினை.) To wait patiently.

     பொறுத்துக்'கொள்-ளுதல். (செ.குன்றா வி.) To bear with.

     பொறுத்துப் போ-தல்: (செ.குன்றி வி.) 1.தோணிகட்டுதல் to ran aground. 2. மாட்டிக் கொள்ளுதல். to be stuck or jammed in. செ.குன்றிய வி. தொடர்ந்து பொறுத்தல், to continue. to tolerate.

     பொறுப்புக் கட்டு-தல் : (செ.குன்றாவி.) 1. பொறுப்பேற்றுதல் (உத்தர வாதப் படுத்துதல்), to put responsibility on 2. ஈடுகாட்டுதல், to tender as security 3. முற்றுவித்தல் to accomplish (W.)

    பொறையிருந்தாற்று-தல் = (செ.குன்றா வி.) துன்பம் பொறுத்தலைக் கடைப்பிடித்தல், to bear with patience "பொறையிருந் தாற்றியென் னுயிரும்போற்றினேன்" (கம்பரா. சுந்தர. உருக்காட்டு. 11).

     பொறையுயிர்-த்தல் (செ.குன்றா வி.) 1. மரக்கலம் சரக்கிறக்குதல், to be unloaded, as a vessel. 2. இளைப்பாறுமாறு சுமையிறக்குதல், to disburden and rest "துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி" (பொருந. 239) 3. மகப் பெறுதல். "பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டில்" (நன். 269, உரை); to be delivered of a child.

     பிறவினை (causal verb)

1. பொறுக்கவைக்கிறேன், பொறுக்கவைத்தேன், பொறுக்கவைப்பேன்.