முப்பத்தறுவரைக் கொண்ட பணிக்குழு, ஐயாண்டிற்கொரு மடலமாக வெளியிட்டு வருகின்றது. இதுவரை மும்மடலம் வெளிவந்துள்ளன. இன்னும் நான்கு வெளிவரல் வேண்டும். அதற்கு இன்னும் இருபதாண்டு செல்லும். ஆண்டுதொறும் பல்கலைக் கழக நல்கைக்குழு பணமுதவி வருகின்றது, ஐயாயிரம் படிகள் அச்சிடப்படுகின்றன. மொத்தச் செலவு ஒருகோடியிருக்கலாம்; மேற்படினும் படலாம். | ஏனை மொழி யகரமுதலிகளெல்லாம், எத்துணை விரிவான வேனும், சொற்பொரு ளகரமுதலிகளே. அவற்றுள் ஒரு சில, சொற் பிறப்பிய லகர முதலி யென்று பெயர் பெற்றிருப்பினும், உண்மையிற் சொற்பிறப்பியல் அகரமுதலிகளல்ல; ஒப்பியல் (comparative) அகர முதலிகளே. ஏனெனின், இயன்மொழியாகிய தமிழிற்போல் திரிமொழி களாகிய ஏனையவற்றிற் சொற்களின் வேரையும் முழு வரலாற்றையும் அறியமுடியாது. | ஆதலால், உண்மையான சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary) தமிழில்தான் இருக்கமுடியும். | இன்று தொகுக்கப்பட்டுவரும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி, சொற்பொருள், சொற்பிறப்பியல் என்னும் ஈரியல்புகளையும் ஒருங்கே கொண்டது. இதன் பணி கீழ்வருமாறு எண்கூற்றது. | | 1. | இதுவரை வெளிவந்த தமிழகர முதலிகளிளெல்லாம் இல்லாத எல்லாச் சொற்களையும் இயன்றவரை எடுத்துப் பொருள் கூறுவது. | | 2. | ஏனை யகரமுதலிகளிலுள்ள தவறான சொல் வடிவுகளைத் திருத்துவது. | | | (எ-டு): | அரிவாள்மனைப் பூண்டு (வழு)-அரிவாள்முனைப் பூண்டு (திருத்தம்). | | | 3. | ஏனை யகரமுதலிகளில் விடப்பட்டுள்ள பொருள்களையெல் லாம் இயன்றவரை எடுத்துக்கூறுவது. | | 4. | ஏனை யகரமுதலிகளிற் குறிக்கப்பட்டுள்ள தவறான பொருள்களை யெல்லாம் திருத்துவது. | | | (எ-டு): | அளைமறிபாப்பு (ப்பொருள்கோள்) = பாட்டின் ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று சென்று பொருள் கொள்ளப்படு முறை (வழு). | | | ஒரு பாட்டின் ஈற்றடி முதலடியாயும், ஈற்றயலடி இரண்டாமடி யாயும், ஈற்றயன்முன்னடி மூன்றாமடியாயும், இங்ஙனமே ஏனையடிகளும், தலைகீழாக மாறி நின்று பொருள்படுவது. (திருத்தம்) | | 5. | எல்லாப் பொருள்களையும் ஏரண முறைப்படி (Logical order) வரிசைப்படுத்திக் கூறுவது. | | |
|
|