| 1. | தமிழைப் பண்படாத பன்மொழிக் கலவையென்றும் வட மொழிக் கிளையென்றும் காட்டித் தமிழனை நாகரிமற்றவனென் றும் காட்டு விலங்காண்டியென்றும் இழித்தும் பழித்துங் கூறும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகரமுதலி, திருத்தப்பெற்றுச் சிந்துவெளி நாகரிகப் பழம்பொருள்களை ஆராயும் பின்னிய அறிஞரைச் செவ்வையாக ஆற்றுப்படுத்தல். |
| 2. | அமைச்சர் மட்டுமன்றித் தமிழரெல்லாரும் தமிழ்ப்பெயரே தாங்கல். |
| 3. | தமிழ்வாயிற் கல்வி கலவை மொழியில் நடைபெறாது தனித்தமிழில் நடைபெறுதல். |
| 4. | முழுநிறைவான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி தொகுக்கப் பெறல் |
| 5. | மறைமலையடிகள் வழிப்பட்ட தனித்தமிழறிஞர் தக்கவாறு போற்றப் பெறல். |
| 6. | தமிழ்நாட்டு முப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்ட பத்தின் முன்பும், மறைமலையடிகள் வெண்கலப் படிமை யேனும் சலவைக்கற் படிமையேனும் நிறுவப்பெறல். |
| 7. | இதுவரை அச்சிற்கு வராத உலகவழக்குத் தமிழ்ச் சொற்க ளெல்லாம் தொகுக்கப்பெறல். |
| 8. | குமரிநாட்டினின்று தொடங்கும் உண்மையான தமிழ்நாட்டு வரலாறு விரிவாக வரைந்து வெளியிடப்பெறல். |
| 9. | குமரிநாட்டுத் தமிழே திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் என்னும் உண்மை தமிழரெல்லாராலும் அறியப்பெறல். |
| 10. | தமிழ்நாட்டுக் கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல். |
| 11. | தமிழ் உலகவழக்குப் படிப்படியாகத் திருந்திவரல். |
| 12. | அரசியல் அலுவலகப் பெயர்ப் பலகைகளிலும் விளம்பரப் பலகைகளிலும் தமிழச்சொற்றொடர்கள் புணர்ச்சியுடன் எழுதப்பெறல். |
| 13. | தமிழ்நாட்டு ஊர்களும் தமிழிலுள்ள பெயர்ப்பலகைகளும் தூய தமிழ்ச்சொற்களையே தாங்கல். |