| பெண்பாற் பகுதி |
| (1) பகலாட்டு |
| 1. பண்ணாங்குழி |
| இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டது. |
| 2. தாயம் |
| பரமபதம், சிலுவைத்தாயம் என வழங்கும் குறுக்குக் கட்டத் தாயம் ஆகிய இரண்டும், பெரும்பான்மையாக வழங்கும் பெண்டிர் தாய விளையாட்டுகளாம். |
| (2) இருபொழுதாட்டு |
| கும்மி |
| இது இளைஞர் பக்கத்திற் கூறப்பட்டுள்ளது. |
| தலையாய குலத்துப் பெண்டிர் பொதுவாக இதை ஆடுவதில்லை. |
| பிற்குறிப்பு : 54ஆம் பக்கத்தில் வரையப்பட்டுள்ள பாரிக் கோடு (அல்லது பாரிகோடு) என்னும் விளையாட்டு, பாரியின் பறம்புமலையை மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்ததைக் குறிக்கலாம். |