பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்83

(3) இருபொழுதாட்டு

     1. 'ஒருகுடம் தண்ணீர் ஊற்றி'
     ஆட்டின் பெயர் : "ஒருகுடம் தண்ணீர் ஊற்றி" என்று தொடங்கும்      பாட்டைப் பாடி ஆடும் விளையாட்டு, அம் முதற் குறிப்பையே பெயராகக்    கொண்டது.
     ஆடுவார் தொகை : இதை ஆட நால்வர்க்குக் குறையாது வேண்டும்.
     ஆடிடம் : இது தெருவில் ஆடப்பெறும்.
     ஆடுமுறை : இருவர் கைகோத்து உயர்த்தி வைத்துக் கொண்டிருக்க அவருக்கிடையே வேறிருவர் அல்லது பலர் ஒருத்திபின் ஒருத்தியாக ஒருத்தி யரையாடையை இன்னொருத்தி பற்றிக்கொண்டு நுழைந்து சென்று, "ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூப் பூத்ததாம், இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டு பூப் பூத்ததாம்" என்று "பத்துக்குடம் தண்ணீர்" வரையும் பாடிக் கொண்டு கைகோத்து நிற்கும் இருவரையும் மாறி மாறிச் சுற்றிக் கொண்டேயிருப்பர்.
     "பத்துக்குடம் தண்ணீர் ஊற்றி" என்ற அடிமுடிந்தவுடன்,  அல்லது  அதற்குச் சற்று முன்பே, கைகோத்து நிற்கும் இருவரும் கையைத் தாழ்த்தி இரண்டாவது அல்லது கடைசிப் பிள்ளையைப் பிடித்துக்கொள்வர் அல்லது சிறைசெய்வர். அப்போது வரிசை முதல்விக்கும் கைகோத்து நிற்பவருக்கும் பின்வருமாறு உறழுரை யாட்டு நிகழும்.
   வ : விடடா துலுக்கா!
   கை : விடமாட்டேன் மலுக்கா!