பக்கம் எண் :

102

Untitled Document



     தமிழ்நாட்டில் இந்நாள்  குறிப்பிடத்தக்க  இனங்கள்  இரண்டு. ஒன்று
தமிழினம். மற்றொன்று ஆரிய இனம்.

     தமிழினம்  என்றால்   தமிழில்   கூறிய பண்பாட்டை உடைய கூட்ட
மாகும். ஆரிய இனம் எனில் ஆரிய மொழியில்   கூறப்படும் பண்பாடுகளை
உடைய கூட்டமாகும்.

     தமிழ் நூற்கள் என்பவை   தமிழ் நான்மறையும் கபிலர் எண்ணுநூலும்,
திருக்குறளும்   அகம்,   புறம் பொருள் நூல்களும் இவற்றின் வழிவந்தனவும்
ஆகும்.

     ஆரிய   நூற்கள்   ஆரிய மும்மறையும், மனுநூலும்,  பகவத்கீதையும்
இவற்றின் வழிவந்த புராணம் முதலிய பொய்நூற்களும் ஆகும்.

     பண்பாடுகள் என்பனமொழியின் பண்பட்ட உள்ளத்தின்  விளைவாகிய
ஒழுகலாறுகள்.

     இனி, தமிழ்ப் பண்பாடுகள்  அதாவது தமிழரின் ஒழுகலாறுகள் எவை
எனக் காணவேண்டும். அதாவது தமிழினம் எது எனக் காணவேண்டும்.

     1. உலகமும் அதிலுள்ள உயிர்த்தொகுதியும்தோன்றுவதற்கு இடமானது
முதன்மை என்பது. ஆதி, முதன்மை ஒரு   பொருளுடைய  தமிழ்ச்சொற்கள்.
இதை மூலப் பிரகிருதி என்று மொழிபெயர்த்துக் கொண்டனர் வடவர்.

     2. தோன்றிய உலகு. உயிர்  அவற்றின்   நடைமுறையை  நிலைநிறுத்
துவது அன்பு.

     3. மக்கள் அடையத்தக்கது அறிவு.

     4. அறிவின் முதன்மையை அடையும் நெறி, வையத்துள்  வாழ்வாங்கு
வாழ்தலேயாகும்.

     5. ஒருவனுக்கு ஒருத்தியும், ஒருத்திக்கு ஒருவனும்  வாழ்க்கைத்துணை.

     6. ஒருவன் செய்த தீவினைக்கு கழுவாய் என்பது இல்லை.

     7. மக்களில் உயர்வு தாழ்வு இல்லை. பிறப்பு ஒக்கும் எல்லா
உயிர்க்கும்.

     8. சாதல் நேர்வதாயிருப்பினும் தாழ்ந்த நெறியில் ஒன்றை அடைதல்
கூடாது.