பக்கம் எண் :

103

Untitled Document

23. பொங்கற் புது நாளில்
உங்கள் தொண்டு என்ன?


(குயில், குரல் 1, இசை 31, 30.12.1958)


     பொங்கற்   புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான்  தி.க.
தொண்டன்.

     அவ்வாறு   சொல்லும்   தகுதி அவனுக்குத்தான் உண்டு. மற்றவர்க்கு
இல்லை.

     தி.க.தொண்டன்   தான்    உண்மைத்   தமிழன்;  அவனிடம் தான்
தமிழ்த்தன்மை மிளிர்கிறது.   அவன் தான் கறைபடுத்தப்பட்டு வரும் தமிழ்த்
தன்மைகளைக்   கறை   நீக்கி   நிலைநிறுத்த   அல்லும்பகலும்  பாடுபட்டு
வருகின்றான்.

     தமிழ்நாட்டைத் தமிழன்  அடையவேண்டும்  என்று எண்ணுகின்றவன்
வேறு எவன்? தமிழ்மொழி வாழவேண்டும். இந்தி தொலையவேண்டும்  என்று
உயிரைப்   பணயம்   வைத்துப்   போரில்   இறங்க   வேறு  எவன் முன்வருகின்றான்?

     சாதி   ஒழிய   வேண்டும்;  பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று
இறப்பு வரும்   நேரத்தும்   இன்னா  நேரும் நேரத்தும் இயம்புவோன் தி.க
தொண்டனை விட வேறு எவன் உள்ளான். எங்கே பார்க்க முடிகிறது.

     பொங்கற்   புதுநாள் தமிழர் திருநாள் அன்றோ! அது தி.க. தொண்ட
னுக்கு உரியதன்றோ!   தமிழர்   திருநாளை சிறப்பிக்க வேண்டிய பொறுப்பு
அவன் தலையில்தான் விழுந்துள்ளது.

     தமிழர் திருநாளைத்  தமிழன்   சிறப்பிப்பது என்றால் என்ன? தமிழர்
திருநாளைத் தமிழன் கொண்டாடுவதென்றால்  என்ன? தமிழர் எண்ணத்தைத்
தமிழர் செயல்களைத் தமிழர் ஆசைகளைச் சிறப்புறச்  செய்வதே அன்றோ?

     இனி    தி.க.தோழர்களை,  தி.க. தலைவர்களை நான் கேட்கின்றேன்
பொங்கல் நாளில் என்ன செய்யப் போகிறீர்கள் என்று.