பக்கம் எண் :

105

Untitled Document

24. உலகுக்கோர் ஐந்தொழுக்கம்


(குயில், குரல் 1, இசை 33, 14.1.1959)


     1. ஓர் இனம்   மற்றோர் இனத்தை மாய்க்கலாகாது.

     2. ஒரு மொழி மற்றொரு மொழியை மாய்க்கலாகாது.

     3. ஒரு நாடு மற்றொரு நாட்டைப் பற்றிச் சுரண்டும்
      பான்மை கட்டோடு ஒழித்தல் வேண்டும்.

     4. உள்நாட்டின்   அமைதியைக் காக்கும் அளவுக்கு
      மேல் பெரும்படை, விலையேறப்பெற்ற அழிப்புக்
      கருவிகளை  எந்த நாடும் வைத்திருத்தல் கூடாது;
      உண்டாக்கக் கூடாது.

     5. அங்கங்குள்ள சான்றோரைக் கொண்ட ஓர் உலகப்
      பெருமன்றம்  மேற்சொன்ன நான்கு திட்டங்களைச்
      சிதறாமல் மேற்பார்வை பார்த்து வரவேண்டும்.,

     இவ்வைந்து ஒழுக்கநெறிகள் நின்றாலன்றி உலகம் முன்னேற முடியாது.

     திங்கள் மண்டலநோக்கி நாயை அனுப்பும் கருவி செய்ய ஐம்பதுகோடி செலவாயிற்றாம்.அந்த நாட்டில் உள்ளவர்களும் அறிவாளிகளா?
அன்புடையவர்களா?

     கதிரவனை   அடையப்   போகின்றதாம் இன்னொரு நாட்டின் கருவி.
அதற்குப்   பலகோடி   செலவாம்.கேடுகால எண்ணந் தவிர வேறென்ன
இதுவெல்லாம்? பெரும்பொருளை இவ்வாறு பாழக்கி விளையாடும்  ஒருநாடு
பொதுநலம் என்பது இன்னது என்று தெரிந்துகொண்டது என்றுகூட  எண்ண
முடியவில்லை ஆனால் அது பொதுவுடைமை பேசுகிறது.

     காசு தந்து   குழுஉச்   சேர்க்கின்றது   ஒருநாடு.   ஏன்  அவ்வாறு
செய்கின்றது?அந்த உள்ளத்தில் அறம் உண்டா? உலகைச்  சுரண்டுவதுதானே
அதன்   உண்மை   நோக்கம்.   எங்களிடம்  நுண்ணறிவுடையோர்   பலர்
இருக்கின்றார்கள்.   அரும்பொருட்களை  கண்டு பிடிக்கின்றனர்   என்றுகூட