பக்கம் எண் :

108

Untitled Document


     ஆனாலும் அண்மையில் நாம் மாபெருங் கிளர்ச்சிப்போராட்டங்களில்,
இறங்கிப்   பெருந்தியாகங்கள்  செய்ய வேண்டியவர்களாக இருப்பதால் நம்
ஒழுக்கத்தாலும்,   கட்டுப்பாட்டினாலும்   சுயநலமின்மையாலும்,   நாணயத்
தினாலும் பொது மக்களிடம் நாம் பெறவேண்டியஆதரவும் நல்லெண்ணமும்
கொள்கையுணர்ச்சி பரவுதலையும்,   இழக்க   வேண்டியதாகிவிடுமோ என்று
பயப்படுகின்றேன்.

     கோட்டி பிரிப்பதும்,காட்டிக்கொடுப்பதுமான ஆசை நோய்வாய்ப்பட்ட
சில சட்டாம்பிள்ளைகளால்   பொது   நலங் கருதிய  போருக்கு இடையூறு
நேருமோ என ஐயப்படுகின்றார் பெரியார்.அஃது அவர் அருள் உள்ளத்தின்
இயல்பாகலாம் எனினும் அவ்வாறு அவர்களால்  பொதுப்பணிக்கு இடையூறு
நேராது என்றும்   நேரும்படி   செய்ய அவர்களால் இயலாது என்றும் நாம்
கருதுகின்றோம்.

     மேலும் பெரியார் இந்நிலைமையை மாற்றியமைக்கத்தக்க நடவடிக்கை
எடுக்கப்போவதாக கூறுகிறார்கள்.  பெரியார்  இதை பன்னாளின் முன்னமே
செய்திருக்கவேண்டும்.

     பெரியார்   எடுக்கும்  நடவடிக்கை  பொதுநலம் கருதியது. தனிநலம்
கெடுகின்றதே   என்று  வருந்தும்   சட்டாம்பிள்ளைகள்   நம் இயக்கத்தில்
இல்லை. இருந்தாலும் அவர்களால் பெரியாரின் பொதுப்பணிக்கு எத்தீமையும்
நேர்ந்து விடாது.