பக்கம் எண் :

110

Untitled Document


     தமிழர்களின் உணர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகின்றோமே, இதனால்
தமிழர்களையே இழந்துவிட நேருகின்றதே என்று அஞ்சுகிறதா அந்தக்கழுகு.
சிறிதுமில்லை.

     திருச்சி வானொலி நிலையத்தின் முன் இளவழகன் உண்ணா  நோன்பு
மேற்கொண்டார்.அவரை ஆகாஷ்வாணி கைவிடப்படும் என்று நம்பவைத்தது
தவிரக் கழுகின் பிடி சிறிதும் தளர்ந்தபாடில்லை.

     இதோ   சென்னை   வானொலி  நிலையத்தின் முன் அரங்கரத்தினம்
உண்ணாநோன்பு துவங்கி இன்று (31.1.59)பத்து நாட்கள் ஆகின்றன.  உயிர்த்
தத்தளிக்கின்றது   தமிழன்பர்க்கு!   அவர்  கேட்பதெல்லாம் ஆகாஷ்வாணி
வேண்டாம் வானொலி வேண்டும் என்பதுதான்.

     அரங்கரத்தினம்   சாகத்தான்   வேண்டும்   அதிகாரம்   செலுத்திக்
கொண்டிருக்கும் தீயவர்கள் வாழத்தான் வேண்டுமா?

     அரங்கரத்தினம் என்ன செய்துவிடும் என்று எண்ணலாம் ஆட்சியாளர
என்ன   செய்து   விடும்   என்று   எண்ணலாம்  தில்லிக்கழுகு. அண்மை
எதிர்காலமே இதற்கு நல்ல பதில்தான் கூறப்போகின்றது.

     தமிழுணர்ச்சியைச்    சிறிதென   எண்ணிவிடாதே   தில்லிக்கழுகே!
உன்னைக்   காத்துக்   கொள்ள   முடியாது. ஆகாஷ்வாணியைக்  கைவிடு!
அஞ்சு! நடுங்கு!