பக்கம் எண் :

111

Untitled Document

27. முற்றுகை இடுவோம்


(குயில்,குரல் 1, இசை 37, 17.2.1959)


     தமிழர் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும். ஆகாஷ்வாணி கிளம்பும்
இடத்தை முற்றுகை இட வேண்டும்.

     இரண்டு   கேட்க   வேண்டும்.   ஆகாஷ்வாணி  நிலையம் இருக்க
வேண்டுமா? ஒழிய வேண்டுமா?

     இப்படிச் செய்யத் தமிழர்களால் தமிழ்த் தலைவர்களால் ஆகவில்லை
எனில் தமிழர் வெள்ளம் கடல் வெள்ளத்தோடு கலந்துவிட வேண்டும்-தமிழர் வாழ்வுக்கே திருவாசகம் பாடிவிட வேண்டும்.

     மானமிழந்த பின் வாழாமை முன்னினிதே அன்றோ!

     நம்பிள்ளை,   தமிழர்களின்  படித்திருவாளன் அரங்கரத்தினம் உயிர்
விடுகின்றான். தமிழர் வாழ்க்கைக்கே ஒரு தேர்தலை ஏற்படுத்தி விட்டான்.

     நானிலம்    நம்மை   நோக்கிக்   கொண்டிருக்கிறது. அது நம்மைக்
கான்றுமிழ விடலாமா? வடக்கத்தியான்  நம் வீரத்தை அளந்து பார்க்கிறான்.
நாம் பேடிகள் இல்லை என்பதைக் காட்ட வேண்டாமா?

     ஆண்டதாகச் சொல்லிக் கொள்ளுகின்றோம்.   நாகரிகம் கண்டவர்கள்
என்று    சொல்லிக்   கொள்ளுகின்றோம்;   வீரர்கள்   என்று  சொல்லிக்
கொள்ளுகின்றோம்.

     எழுவோம்! தூங்க மாட்டோம் ! ! !