பக்கம் எண் :

112

Untitled Document

28. என்ன நடந்தது?


(குயில், குரல் 1, இசை 38, 24.2.1959)


     ஆகாஷ்வாணியை எதிர்த்து உண்ணாநோன்பு கொண்ட திரு.அரங்க
ரத்தினம் நேற்றுவரைக்கும் நாட்களைத் தள்ளிவிட்டார்.

     இது ஆட்சியாளருக்கு பெரியதோர் அச்சத்தை உண்டு பண்ணியதில்
வியப்பில்லை.இந்த உண்ணா நோன்புச்செய்தியில் மிகுதியாய்த் தலையிட்டுக்
கருத்தை வெளியிட்டு மக்களின் கசப்பைத்   தேடிக் கொண்டவர் சென்னை
அமைச்சரான பக்தவச்சலனாரே.

     அரங்கரத்தினத்தின் உயிர் போய்விட்டால் தமக்குத் தான் மக்களால்
தொல்லை     ஏற்படும்     என்று      பெரிதும்   அஞ்சிக்  கிடந்தவர்
பக்தவச்சலனாராகத்தான் இருக்கமுடியும்.

     20ம் நாளாகிய 19.2.1959ல்    தமிழ்நாட்டு   தலைவர்கள்   அரங்க
ரத்தினத்தைக் கண்டு ‘இந்தப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது. ஆகவே
உண்ணா நோன்பை நிறுத்திவிடுங்கள்’   என்று   கேட்டுக்  கொண்டதாகத்
‘தினத்தந்தி’ செப்புகின்றது.

     இவ்வாறு   கேட்டுக்  கொண்ட தமிழ்நாட்டுத் தலைவர்களின் பெயர்
களையும் ஆதித்தனார் தினத்தந்தி வெளியிட்டது.

     அவர்கள்தாம்,   நாம் தமிழர்  இயக்கத் தலைவர் சி.பா.ஆதித்தனார்
திராவிட   முன்னேற்றக்   கழகத்தலைவர்களில்  ஒருவரான க. அன்பழகன்
நாம்   தமிழர்   இயக்கச்   செயலாளர்   சி.அ.வரதராசன்  இன்னும்  பல
கட்சிக்காரர்கள்.

     தமிழ்நாட்டின்   தலைவர்களைப்   பார்த்திருக்கிறீர்களா? நினைவில்
வைத்துக் கொள்வது கடினம்.  ஒருதாளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
தலைவர்களின் பெயர்ப்பட்டியல் பெரிதாயிருப்பதால்.

     இந்த இரண்டு   மூன்று ஆட்கள் மட்டுமா இந்த அரும்பணி செய்ய
முன்வரவேண்டும்   என்று   நீங்கள்    கேட்கலாம். வேறு என்ன செய்யச்
சொல்கின்றீர்கள். பக்தவச்சலனாருக்குக்    கிடைத்த கையாட்கள் இவ்வளவு