மட்டுமே.இந்த கீழ்த்தரச் செயலுக்கு எல்லோரும் ஒப்புக் கொள்வார்களா?உள்ளம் ஒப்புக் கொண்டாலும் வெளிப்படையாக வெளியில் வர ஒத்துக் கொள்வார்களா?
வானொலி என்ற தொடரையும் ஆகாஷ்வாணி கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று தில்லியிலிருந்து சேதி வந்ததாக அமைச்சர் சில நாட்களுக்கு முன்னமே சொல்லியதை அரங்கரத்தினமும் இந்த ஆதித்தனாரும் பிறரும் ஒப்ப மறுத்தார்கள் என்றது அனைவர்க்கும் நினைவிருக்கும் இன்றைக்கு அதையே தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர்கள் வெற்றி என்று சொல்லியதன் காரணம் என்ன?தமிழ் மானத்தை வடவனுக்குக் காட்டிக் கொடுப்பதும் பக்தவச்சலனாருக்கு அரங்கரத்தினத்தைக் கூட்டிக் கொடுப்பதுந்தானே!
இதில் படிப்போருக்கு ஓர் ஐயப்பாடு தோன்றலாம். இந்தப் புண்ணியச் செயலில் அன்பழகனும் ஆதித்தனார் மட்டும் தலையிட்டதென்ன என்று.
அன்பழகனார் பக்தவச்சலனாரின் கையாளானார் இல்லையா? ஆதித்தனார் கிடைத்தது எப்படி என்று கேட்கின்றீர்கள்.
தி.மு.க. ஆள் பிடிப்புக்கு அன்பழகனார் ஆதித்தனாரின் புதுத் தொடுப்பு! ஒழிக தமிழ்!
வாழ்க வஞ்சக நெஞ்சங்கள்!. !. !.
|