அறிவுப் பொருளாகச் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் கண்ட லக்கனோ பல்கலைக்கழகம் பெரியார் திருமுன் ஓர் அழைப்பைப் படைத்தது. அங்கணும் சென்று ஆணேறு பொழிந்தது தேனாறு. சாதி ஒழிப்பின் இன்றியமையாமையை நன்று விளக்கி அந்தப் பாழுங் கிணத்திலிருந்து மீளும்படிக்குள்ள வழிவகை இன்னதென்றும் பன்னிப்பன்னி உரைத்தருளினார் தந்தை பெரியார்.
அங்கு எல்லாக் கூட்டங்களிலுமே தாழ்த்தப்பட்ட மக்கள் தன்மானம் என்னும் உயிரை இழக்காதிருக்க இந்து மதத்தைவிட்டு வெளியேறிப் புத்த நெறியைத் தழுவவேண்டும் என்பதை வலியுறுத்தியே சென்றார்கள்.
இவ்வாறு பெரியார் வலியுறுத்தினால் கிலியுறுத்தாமல் இருக்குமா இந்துமகா சபையினரை! என்ன அவர்கள் செய்தார்கள்? பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு கலவர வேட்டுக்கு நெருப்பு வைத்தார்கள். ஆனால் அது பிசுபிசுத்துப் போனது.
மேலும் நம் பெரியார் என்ன செய்தார்? வீட்டுக்கா கம்பி நீட்டினார்? ஓட்டினார் வண்டியை உத்திரப்பிரதேசம் நோக்கி! நேருவின் மாநிலத்தை நோக்கி!
ஆட்சியிலிருக்கும் அரசியலாரின் கொடுமைகளை அகர வரிசையாக விளக்கினார். மறைவாக அன்று வெளிப்படையாக மெல்ல அன்று குரல் எடுத்தது இரண்டுபேர் முன்னல்ல!எண்ணித் தொலையாப் பெருமக்கள் முன்! அப்படியே அங்கேயே பெரியார் கையோடு பெற்றுப் பையோடு கொண்டு வந்த பொருள் என்ன? சாதி ஒழிப்புக்கு தக்க ஆதரவு நாட்டின் மீட்சிப் போராட்டத்திற்கு நல்ல ஒத்துழைப்பு; இந்த இரண்டு கோடி வெண்பொற் காசுகளே!
இந்திய யூனியன் தலைநகரினும் (புதுதில்லி) பல கூட்டங்களில் உற்றதம் கருத்துக்கு வெற்றி முரசு முழங்கி அம்பாய்ப் பாய்ந்தார் பம்பாய் மாநிலம்.
பம்பாயில் பல எம்.பிக்களும் தமிழர்களும் அரசியல் கணக்கரும் அன்புடன் வரவேற்று நலஞ் செய்தனர் பெரியாருக்கு. அங்கும் தந்தையார் அறிவுரை ஆற்றுகையில் கடவுள், மதம், ஜனநாயகம் (மக்களாட்சி) என்ற பேய்களையும் பார்ப்பன ஏடுகளையும் அரசியல் கட்சிகள், சட்டமன்றப் பித்தம்,சினிமா முதலிய தொத்து நோய்களையும் ஒழித்துக் கட்டிப் பார்ப்பான்-
|