பக்கம் எண் :

116

Untitled Document


பறையன் ஒழிந்த ஒருநிலைப்         பெருமக்கள் அமைந்த நிறுவனத்தை
நிறுவவேண்டும்   என்பதை   வலியுறுத்தியருளினார்.   அவ்வாறு பெரியார்
வலியுறுத்தியது பலன் கிடைத்தது - கைமேல்.

      அரசியல்   கணக்கர் பலர், பெரியார் வழி நிற்பதாக உறுதி கூறினார்
அன்றோ!

      வெறுங்கையோடு   திரும்பினாலும் விரும்பி எதிர்கொண்டு வாழ்த்தி
வரவேற்கும்   தமிழராகிய   நாம்   வெற்றிக் கொடியைத் தூக்கி வருகின்ற
பெரியார்   1.3.1959     சென்னைத்   திருவல்லிக்கேணியில்  வரவேற்புப்
பொதுக்கூட்டத்தில்   அவரிடம்  எதிர்பார்க்கும் வடபுலச் செலவு விரிவைக்
கேளாது வாளாயிருக்கவா முடியும்!