(குயில், ,குரல்-1, இசை-40, 10.3.1959)
கேள்வி : நீர் யார்?
பதில் : மாவட்டத் தலைவர்
கேள்வி : உம் தலைமையில் எத்தனை பேர் உறுப்பினர்?
பதில் : கிளைக்கழங்களில் இருப்பவர்களையெல்லாம் சேர்த்தால் நூறுபேர்கள் இருக்கலாம்.
கேள்வி : மாவட்டத் தலைமை அலுவலக உறுப்பினர்?
பதில் : எங்கே? தம்தம் வேலையைப் பார்த்துக் கொள்ளுகின்றார்கள். நான் ஒருவன்தான்
கேள்வி : மாவட்ட மாநாடு நடத்தினீர்களா?
பதில் : ஓ! மிகச் சிறப்பாக.
கேள்வி : பெரியாருக்கு வரவேற்பு நடத்தினீர்களா?
பதில் : மிக மிகச் சிறப்பாக.
கேள்வி : உள்ளூரில் உமக்குப் போட்டியாகக் கிளம்புகின்றவர்களில் உமக்கு ஏற்படும் தொல்லை எப்படி?
பதில் : ஒழித்துக் கட்டிவிட்டேன்.
கேள்வி : இத்தனை சிறப்பாக மாநாடு, இத்தனை சிறப்பாக வரவேற்பு நடத்திய உங்களை அவர்களால் என்ன செய்ய முடியும்?
பதில் : அசைக்க முடியவில்லை. அதற்காகத்தானே ஐயாவுக்கு வரவேற்பு மாநாடு.
கேள்வி : சரிதானே! உங்களுக்குப் புகைவண்டி நிலையத்தில் ‘விடுதலை கிடைக்கிறதா?
|