பதில் : இல்லை.
கேள்வி : உங்களுக்கு எத்தனை விடுதலை வருவதுண்டு.
பதில் : தனித்தனியாகத் தபாலில் வருவது மொத்தம் சேர்த்தால் எட்டு இருக்கும். கேள்வி : வெளியூர்காரர் வந்தால் கழகம் இருப்பது தெரிந்து மகிழ எத்தனை இடத்தில் கழகக் கொடிகள் பறக்கின்றன. பதில் : அதில் என்ன ஐயா இருக்கிறது. அது பற்றி நாங்கள் எண்ணுவதே இல்லை.
கேள்வி : கழகச் சார்பில் வெளிவந்துள்ள நம் அருமை நூற்களை உங்கள் மாவட்ட மக்கள் எவ்வளவு படிக்கின்றார்கள் எத்தனை பேர்கள் வாங்கியிருக்கிறார்கள்.
பதில்: என்னிடமிருந்துதான் வாங்கிப் போவார்கள் அவர்களும் சிலரே. கேள்வி : பொறுப்பாகத் தொண்டு செய்யத் துடிக்கும் தொண்டர்களுக்கு இடமளித்து நீங்கள் ஏன் விலகிக் கொள்ளவில்லை?
பதில் : அப்படியானால் என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கேள்வி : நீர் ஒரு தலைவரா?
|