பக்கம் எண் :

119

Untitled Document

31. நீர் ஒரு தலைவரா? 2


(குயில், குரல்-1, இசை-42, 17.3.1959)

கேள்வி :    நீவிர் யார்?

பதில் :      நான் தான் மாவட்டத் தலைவன்

கேள்வி :    திராவிடர் கழகப் போராட்டத்தில் கடைசி ஐந்தாண்டின்
             நிலை என்ன?

பதில் :      உயிரைப் பணயம் வைத்துப் (கவன் அன்று) போராடு
             கின்றது நம் கழகம்.

கேள்வி :    போரின் நோக்கம்?

பதில் :      தமிழக விடுதலை

கேள்வி :    இதில் பெரியாரின் அரிய கருத்துக்கள் அரிய உழைப்பு
             அஞ்சா நெஞ்சு பயன்பட்டது தவிர உம்மால் ஏற்பட்ட
             பயன் என்ன?

பதில் :      ஏதுமில்லை?கூட்டங்கள் நடத்தினேன்.

கேள்வி :    பெரியாரைக் காட்டித்தானே?

பதில் :      மாநாடு பெரிதாக நடத்தினேன்

கேள்வி :    பெரியாரைக் கொண்டு தானே?

பதில் :      பெரியாருக்கு நான் ஏற்பாடு செய்த வரவேற்பில் எத்தனை
             இலக்கம் மக்கள்.

கேள்வி :    பெரியாருக்காக மக்கள் வந்தார்கள் இல்லையா?
             குறிப்பிடத்தக்க வகையில் நீர்!...நீர் செய்தது என்ன?
             நீர் செய்வதாகச் சொல்லும் உன் பெயரிருக்க
             வேண்டும் வேறுபெயர் இருத்தல் கூடாது.
             அப்படிச் செய்த தொண்டில் ஒன்றைக் கூறுக?

பதில் :      அப்படிப்பட்டதாக நான் என்ன செய்யவேண்டும்.
             சொல்லுங்கள் பார்ப்போம்.

கேள்வி :    நீர் எப்போதாவது ஒரு தமிழனைக் கண்டு - இயக்க
             ஏடான விடுதலை வாங்க வேண்டிய இன்றியமையாமை
             குறித்துப் பேசியதுண்டா? வாங்கச் செய்ததுண்டா? இயக்க