பக்கம் எண் :

12

Untitled Document

7. கேள்வியும்: பதிலும்

குயில், தினசரி, புதுவை, நாள்: 20.9.48, பக்.2-3


     கேள்வி -   இந்திய யூனியனில் சேரக்கூடாது என்பதை எல்லா
அரசியல் தலைவர்களும்,எல்லா  முனிசிப்பல் தலைவர்களும், எல்லா
மக்கள் பிரதிநிதிகளும் ஆதரிக்கையிலும்  வக்கீல்களில்   பலர் ஏன்
எதிர்க்கிறார்கள்?

     பதில்:-     வக்கீல்களில் பலருக்கு ஏன் சென்ற எலெக்ஷனில்
தோழர்சுப்பையா         கட்சி, பதவி கொடுக்கவில்லை?   அந்தக்
கடுப்புதான் காரணம் !  இப்போதுள்ள கட்சியும்   அப்படித்   தான்
ஒதுக்கும் என்றும்அவர்கள்  நினைக்கிறார்கள்,அதுவுந்தான் காரணம்.
தோழர் சுப்பையாவுக்கு      முன் நடந்த கட்சிகள்   வக்கீல்களால்
நடந்தன.வக்கீல்களுக்கு விடுவார்கள்.இதனால் வக்கீல்கள் அரசியலில்
தலையிடுவதை  மக்கள் அறவே வெறுக்கலானார்கள். அதனால் தான்
சுப்பையா   கட்சி  இரண்டொரு  வக்கீல்களைத் தவிர மற்றவர்கட்கு
பதவி தரவில்லை.

     கேள்வி :- இந்திய யூனியன் மிகப்பெரிது: அங்கே கல்வித்துறை
விரிவாக       அமைந்திருக்கிறது.  அதனால்         கல்வி வசதி
அங்குத்தானே இருக்க முடியும்?

     பதில்:- கல்வி வசதிதான்    அங்கு  இல்லை.பிரஞ்சிந்தியாவில்
உள்ள      பள்ளிகளில் மாணவர்கட்குச்   சம்பளமில்லை.  அங்கே
சம்பளம் வாங்காத பள்ளிக் கூடமே இல்லை.

     கேள்வி :-பிரஞ்சிந்தியாவில்   பிரஞ்சுக்காரர்  என்ன  உரிமை
கொடுத்திருக்கிறார் நமக்கு?

      பதில் :-   எல்லா  உரிமைகளும் நமக்குண்டு; எல்லார்க்கும்
இங்கே வாக்குரிமை உண்டு, அங்கு பணக்காரர்களுக்கு மட்டும்தான்
வாக்குரிமை.

     கேள்வி :- பிரஞ்சிந்தியாவில் சட்டசபையின் முடிவை கவர்னர்
மாற்ற முடியும். இது மக்கள் உரிமையைப் பறிப்பதல்லவா?

     பதில் :-   இங்கு  வன்னியர்க்கு      அரசியல் செல்வாக்குக்
கிடைத்தால்,மற்ற       மரபினர்க்குத்   தொல்லை  தேடப்படுகிறது.
வேளாளர்க்குச் செல்வாக்குக்