பக்கம் எண் :

13

Untitled Document

கிடைத்தால்     வன்னியர்  முதலிய மற்றவர்கட்குத்     தொல்லை
உண்டு     பண்ணப்படுகிறது.சாதிப் பூசல் இப்படி! கத்தோலிக்கர்க்கு
அரசியல் பதவி கிடைத்தால்    கத்தோலிக்கர்    அல்லாதவர்கட்கு
ஏமாற்றம்   அல்லாதார்க்குச் செல்வாக்கானால்    கத்தோலிக்கர்க்கு
ஏமாற்றம்.மதப்பூசல் இப்படி! இதனால் நமக்கு ஒரு பொதுவான ஆள்
தேவைப்படுகிறது. ஆனால் இப்போது சாதி மத   வேற்றுமைப் பூசல்
ஒழிந்து  வருகிறது. கவர்னர்          அதிகாரத்தைத் தொலைப்பது
முடியாததல்ல.பெறமுடியாது என்று கருதிய   உய்னித்தே தெலீஸ்தை
நாம்    பெறவில்லையா?   வெள்ளைக்காரரைத்தான்  தெப்புய்த்தே
சேனாத்தேராக    எடுக்க  வேண்டும்      என்ற வழக்கத்தை நாம்
உடைத்தெறிந்து. நம்மவர்களையே       தேர்ந்தெடுக்கவில்லையா ?
இன்னும் கேள்.இங்கே கவர்னருக்கு அதிகாரம்         என்கிறாய்?
அதிகாரமுள்ள அந்த கவர்னரை,       நினைத்தால்  மாற்ற நமக்கு
அதிகாரம்        இருக்கிறதே !  பிரஞ்சிந்தியா  ஏற்பட்ட இருநூறு
ஆண்டுகளில் நாம் மாற்றிய         கவர்னர்களும்  இருநூறு பேர்
இருக்கலாமே.எட்டு   நாளில்       ஒருவரை மாற்றி இருக்கிறோம்.
ஆகையால் முழு உரிமை நமக்கு இங்கே இருக்கிறது.