பக்கம் எண் :

255

Untitled Document


     இப்படிப்பட்ட தொண்டர்களுக்குப்பெரியார் அளித்து வரும் பரிசு
என்ன? அவர்களிடம் ஒற்றுமையைக் கெடுத்து வேற்றுமையை வளர்த்து
அவர்களுக்கு எந்நேரமும் மனத் தொல்லையா?

     தொண்டர்களுக்கும் சொந்த ஆசை  இருக்கும்.  அந்த ஆசையின்
காரணமாகப்    பொதுப்   பணம்   என்பதில்   விரல் வைத்தார்களா?
இல்லவேயில்லை. ஒருவர், இருவர் தம் இயக்கக் கருத்துக்களை வளர்க்க
ஏடுகள்   வெளியிட   எண்ணுவார்கள். எண்ணிய இடத்திலேயே அந்த 
எண்ணம்  மண்ணாக்கப்படும். ஏடு வெளிவந்து விட்டால் அதை ஒழித்து
விட்டு மறுவேலை பார்க்கப்படும். வெளியிடுவார் ஒருவர்,அதற்காக அவர்
படும்பாடு எது படும். நாடகம் போடுவார் ஒருவர்.அவரை  ஒழித்துக்கட்டி
பின்புதான்   மறுவேலை.    காலமெல்லாம்  இயக்க முன்னேற்றத்திற்கு
உழைப்பார்  ஒருவர் அவர்  எதிரிகளின்   நலங்கருதி மூக்கறுப்படுவார்.
பழிவாங்கப் படுவார்மானமிழந்து போகும்படி செய்யப்படுவார்.

     இன்னும் பெரியார், தொண்டர்களின் அன்பை இழந்து விடவில்லை.

     இனிமேலாவது,

     பெரியார்    தருமத்தை மதிக்க  வேண்டும். இனிமேலாவது பெரியார
நம்பினோரைக் காப்பாற்ற   வேண்டும். தேர்தலில் கலந்து கொள்வதில்லை.
தி.க.இந்தத் திட்டத்தை மாற்றவேண்டும். மாற்றவில்லையானால், எவருக்குத்
தொண்டு     செய்கின்றோமோ,    அவர்கள்   (காங்கிரசு)  ஏதாவதொரு
திட்டத்திற்குக் கட்டுப்படுவதாகப் பெரியாரையும்தொண்டர்களையும் கேட்டுக்
கொள்ளவேண்டும்.

     தேர்தல்   தொண்டு    செய்து   தருவதாக  மொத்தக் குத்தகையும்,
குருசாமிக்குக்  கீழ்க் குத்தகை பேசிக் கொண்டு,  தொண்டர்களை ஏய்ப்பது
கூடாது, வேலை தீர்ந்தபின்   காங்கிரசுகாரர் பேசும் முடிச்சு மாறித்தனமான
பேச்சைக் கேட்டுத் தொண்டர் மனம் புண்படும்படி செய்யலாகாது.

     தமிழ்நாடு என்று பேர்  வைக்கமறுக்கும் பேர்வழிக்குத்தொண்டு செய்ய
எண்ணமிருந்தால்,   தனிமுறையில்    நடக்கட்டும்,   இந்திக்கு வழிகோலும்
வகையில்   எல்லாத்   துறையிலும்     தமிழ்  கொலை செய்யப்படுகின்றது.
பெரியாருக்கு   இது   பிடித்தமாக   இருக்குமானால் தனிமுறையில் வேலை
செய்யட்டும். குருசாமியை வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளட்டும். சரியான
ஒத்துக்கு மத்தாளம்! தமிழில் என்ன  இருக்கின்றது கேட்கின்றார் நன்றியுள்ள
குருசாமி, இன்னொன்று,ஒரு வட்டத்தில்  ஒரு பொறுக்கிப்பையனை காங்கிரசு,
சட்டசபை தேர்தலுக்கு நிறுத்துகிறது.    அதே வட்டத்திலுள்ள - மானமுள்ள,