பக்கம் எண் :

257

Untitled Document

94. இரு முறையும் வாழ்த்துகிறோம்


(குயில், குரல்-3, இசை 31, 17.1.1961)


     பிரஞ்சுக்காரர்கள்   புதுவையில்  இருந்து  ஆண்ட கால முழுவதும்
அவர்கள் குரங்குப்பிடியாக கையாண்டு வந்த கொடுஞ்செயல்கள் இரண்டே
இரண்டுதான்.  தமிழ்  வளர்ச்சிக்குத் தடை போட்டது ஒன்று. கத்தோலிக்க
மதவலை   வீசிகட்குச்  சலுகை   தருவதின்  மூலம் மக்களிடையே கலகம்
விளைத்தது மற்றொன்று.

     கத்தோலிக்கர்   அல்லாத  ஒரு   பழந்தமிழர்   தனக்குச் சட்டப்படி
சேரவேண்டிய   ஓர் அலுவலுக்கு வாய் திறந்தது தெரிந்தால், கத்தோலிக்கர்
குருக்கள் காலனித் தலைவரைக் கண்டு பேசுவார். பழந்தமிழன் தோற்றான்.

     அலுவலகங்களில்   தலைமையிடம் அனைத்தும் கத்தோலிக்கர்களுக்கே
அமைய   வேண்டும்.   மற்ற   இடங்களைக்கூட   கத்தோலிக்கர்களுக்குக்
கொடுத்தது   போக   மீதியான   இடங்களைத்தாம் பிறர் அடைய முடியும். 
குடியரசு   ஆட்சியின்    உறுப்பினரான   கத்தோலிக்கர் கொள்ளைக்காரர்
பிரஞ்சுக்காரராய்   இருந்தும்   இந்தத் தீய எண்ணத்தை எந்த நொடியிலும்
கைவிட்டதே    இல்லை.   கத்தோலிக்க  மாணவர்கள் தமக்குக் கிடைக்கும்
கட்டாயச்   சலுகையினின்று   ஏற்படும்  திறமையால் வகுப்புத் தேர்தலிலும்
அலுவல்   தேர்தலிலும்   தேறி   விடுவார்களாதலால்,  முற்கூட்டியே தேறி விடுவார்களாதலால்     முற்கூட்டியே   தேறிவிட்டார்கள்   என்றே முடிவு
சொல்லப்பட்டு விடும்.

     மருத்துவத்    தலைமை விடுதிக்கு பிரான்சு நாட்டிலிருந்து மருத்துவப்
புலவர் தலைவர் என்று ஒருவர் வந்து சேருவார்.  தலைவர் என்ற முறையில்
தம் அதிகாரத்தை தொடங்குவார். அலுவலகத்தாரைக்  கிடுகிடு என்று நடுங்க
வைப்பார்.ஆனால் அதே நேரத்தில் அலுவலகத்தில்  கட்டுக்கட்டத் தெரியும்
என்று   நுழைந்துள்ள   ஒரு   கத்தோலிக்க   கன்னிமாடத்துக் கன்னிக்குத்
தலைவர்,  கிடுகிடுவென்று நடுங்குவார். மருந்துக்களின்  இருப்பு அத்தனையும்
கன்னிகளிடம் கணக்கு கேட்கக் கூடாது.

     இந்த   இழிவுநிலை   பிரஞ்சுக்காரர்   போனபின்   இராது   என்று
நம்பப்பட்டது.   வந்த  பார்ப்பனர்  அந்த நிலையைத் தமக்குப் பயன்படுத்த
லானார்கள்.   கத்தோலிக்கரிடம்    இருக்கும் நல்ல குணம்